“ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கார் விருதே குடுக்கலாம்” கம்பீர் கோலி ஹக் குறித்து – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 17-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக பெங்களூர் அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

அதோடு தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகள் சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி தங்களது வெற்றிநடையை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டியின் போது கௌதம் கம்பீர் போட்டியின் இடையே விராட் கோலியை கட்டியணைத்து சிரித்த முகத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

- Advertisement -

சண்டை கோழிகளாக இருந்த இவர்கள் இருவரும் இப்படி அன்பை பரிமாறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருந்தது. நேற்றைய போட்டி முடிந்ததிலிருந்து இவர்கள் இருவரது இந்த செயல்பாடு குறித்தே இணையத்தில் பெருமளவு பேசப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போது கம்பீர் விராட் கோலியுடன் மைதானத்தில் சண்டைக்கு சென்றிருந்த வேளையில் நேற்றைய போட்டியிலும் அதேபோன்று ஏதாவது சம்பவம் நடைபெறுமா? என்று பார்க்கப்பட்ட வேலையில் அவர்கள் இருவருமே சிரித்த முகத்துடன் கட்டியணைத்து பேசிக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

இப்படி இவர்கள் இருவரும் ஒன்றாக பேசிக்கொண்டது குறித்த வீடியோவும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பானது. அப்போது இந்த போட்டியின் வர்ணனையாளராக செயல்பட்டிருந்த கவாஸ்கர் கூறிய ஒரு கருத்து தான் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த வீடியோவை பார்த்த ரவி சாஸ்திரி : கோலி – கம்பீர் கட்டியணைத்துக் கொண்டது கே.கே.ஆர் அணிக்கு பேர்பிளே விருது கிடைக்க உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : தனியாளா கோலி என்ன செய்வாரு.. அது மட்டும் கிடைச்சுருந்தா போட்டியே மாத்திருப்பாரு.. கவாஸ்கர் காட்டம்

இப்படி ரவி சாஸ்திரி கூறியவுடனே கவாஸ்கர் பதிலுக்கு கூறியதாவது : “ஃபேர்பிளே மட்டுமல்ல கம்பீரின் இந்த செயலுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்” என்று கேலியாக தனது கருத்தினை தெரிவித்து இருந்தார். இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement