தனியாளா கோலி என்ன செய்வாரு.. அது மட்டும் கிடைச்சுருந்தா போட்டியே மாத்திருப்பாரு.. கவாஸ்கர் காட்டம்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 29ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 10வது போட்டியில் கொல்கத்தாவிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு பரிதாபமாக தோற்றது. இத்தனைக்கும் சொந்த ஊரான எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 83* (59) ரன்கள் எடுத்த உதவியுடன் 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை சேசிங் செய்த கொல்கத்தா பெங்களூரு பவுலர்களை அடித்து நொறுக்கி 16.5 ஓவரிலேயே எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அந்த அணிக்கு பில் சால்ட் 30, சுனில் நரேன் 47, ஸ்ரேயாஸ் ஐயர் 39*, வெங்கடேஷ் ஐயர் 50 ரன்கள் எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் தொடர்ந்து எம் சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தாவிடம் தொடர்ந்து 9வது வருடமாக 6வது போட்டியில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

கவாஸ்கர் காட்டம்:
முன்னதாக இந்த போட்டியில் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி வேகமாக ரன்கள் சேர்த்தார். ஆனால் எதிர்புறம் கேப்டன் டு பிளேஸிஸ் 8, கேமரூன் கிரீன் 33, கிளன் மேக்ஸ்வெல் 28, ரஜத் படிடார் 3, அனுஜ் ராவத் 3 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். அதனால் பவர் பிளே முடிந்ததுமே நிதானமாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்ட விராட் கோலி கடைசியில் 83* (59) ரன்களை 140.68 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார்.

இருப்பினும் அப்போட்டியில் விராட் கோலி மெதுவாக விளையாடியதே பெங்களூரு தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்ததாக ஒரு தரப்பு ரசிகர்கள் வழக்கம் போல விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்ப்புறம் வந்த பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி கை கொடுத்திருந்தால் இந்த போட்டியில் விராட் கோலி 120 ரன்கள் அடித்து வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

எனவே தனியாளாக விராட் கோலி என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தனியாளாக எவ்வளவு ரன்கள் அடிக்க முடியும் என்று நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். யாராவது ஒருவர் அவருக்கு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். ஒருவேளை இன்று யாராவது ஆதரவு கொடுத்திருந்தால் 83க்கு பதிலாக அவர் கண்டிப்பாக 120 ரன்கள் அடித்திருப்பார்”

இதையும் படிங்க: இந்த பிரச்சனையை வெச்சுகிட்டு ஆர்சிபி கோப்பை ஜெயிக்க சாத்தியமே இல்ல.. விமர்சித்த மைக்கேல் வாகன்

“எனவே இது தனிநபர் வெற்றியை பெற்றுக் கொடுக்கும் விளையாட்டு கிடையாது. இது அணி விளையாட்டாகும். விராட் கோலிக்கு இன்று எந்த சப்போர்ட்டும் கிடைக்கவில்லை” என்று கூறினார். அப்படி பேட்ஸ்மேன்கள் தான் கை கொடுக்கவில்லை என்று பார்த்தால் கடைசியில் பெங்களூரு பவுலர்கள் அதை விட மோசமாக பந்து வீசி 16.5 ஓவரிலேயே வெற்றியை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement