இந்த பிரச்சனையை வெச்சுகிட்டு ஆர்சிபி கோப்பை ஜெயிக்க சாத்தியமே இல்ல.. விமர்சித்த மைக்கேல் வாகன்

- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற பத்தாவது லீக் போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு விராட் கோலி 83* (59) ரன்கள் எடுத்த உதவியுடன் 183 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

ஆனால் அதை சேசிங் செய்த கொல்கத்தா அடித்து நொறுக்கி 16.5 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது. அந்த அணிக்கு பில் சால்ட் 30, சுனில் நரேன் 47, வெங்கடேஷ் ஐயர் 50, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 39* ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் தொடர்ந்து பெங்களூரு அணி 9வது வருடமாக 6வது போட்டியில் கொல்கத்தாவிடம் தங்களுடைய சொந்த ஊரில் பரிதாபமாக தோற்றது.

- Advertisement -

வெற்றிக்கு வாய்ப்பில்லை:
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் டு பிளேஸிஸ் 8, கேமரூன் கிரீன் 33, கிளன் மேக்ஸ்வெல் 28, ரஜத் படிடார் 3, அனுஜ் ராவத் 3 ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார்கள். அப்போது பிட்ச் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சவாலாக காணப்பட்டது.

அதன் காரணமாக கொல்கத்தா பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிப்பதற்கு தடுமாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வதாக பேட்டிங் செய்த கொல்கத்தா அதே பிட்ச்சில் பெங்களூரு பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி 16.5 ஓரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக பகுதி நேர பேட்ஸ்மேனான சுனில் நரேன் 2 பவுண்டரி 5 சிக்ஸர்களை பறக்க விட்டு 47 (22) ரன்களை 213.64 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி பெங்களூருவின் வெற்றியை பறித்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியில் பெங்களூரு தோல்வியை சந்திப்பதற்கு சுமாரான பேட்டிங்கை விட படுமோசமான பவுலிங் முக்கிய காரணமாக அமைந்தது. சொல்லப்போனால் ஆரம்ப காலம் முதலே பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதும் அதை அப்படியே பவுலர்கள் எதிரணிக்கு வாரி வழங்குவதாலேயே இதுவரை பெங்களூரு அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: பெங்களூரு அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற அசத்தலான வெற்றிக்கு காரணம் இதுதான் – ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி

இந்நிலையில் இது போன்ற பவுலிங்கை வைத்துக் கொண்டு பெங்களூரு அணியால் கோப்பையை வெல்லவே முடியாது என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த பவுலிங் அட்டாக்கை வைத்துக் கொண்டு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்வது அசாத்தியமாகும்” என்று கூறியுள்ளார்.

Advertisement