பெங்களூரு அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற அசத்தலான வெற்றிக்கு காரணம் இதுதான் – ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி

Shreyas
- Advertisement -

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-ஆவது லீக் போட்டியானது மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி 7 வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வைத்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூர் அணி :

20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி மிகச் சிறப்பாக ஆரம்பித்தது மட்டுமின்றி முதலில் இரண்டு போட்டியிலும் வெற்றியும் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு பெங்களூரு அணியை வீழ்த்தியது குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் :

நாங்கள் இங்கு (பெங்களூரு) வந்ததுமே இரண்டு செஷன்கள் பயிற்சி செய்தோம். அந்த பயிற்சியிலேயே மிகச் சிறப்பான ஆட்டம் வெளிப்பட்டது. அதோடு கடந்த போட்டியிலும் நாங்கள் நல்ல முறையில் விளையாடியதால் இந்த போட்டியில் அந்த தன்னம்பிக்கை உதவியது. இந்த மைதானத்தில் வந்ததுமே பந்துகளை அடிக்க முடிந்தது.

- Advertisement -

ரசல் இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை கைப்பற்றியதால் மற்ற பவுலர்களுக்கும் அது உதவியாக இருந்தது. இந்த மைதானத்தின் சூழ்நிலை சரியாக கனித்து அதற்கேற்றார் போல் அவர் பந்துகளை வீசினார். அதேபோன்று நரேனும் இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தார். அவருக்கு பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும். அந்த வகையில் மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார்.

இதையும் படிங்க : முதல் 6 ஓவரிலேயே அவங்க 2 பேரும் மேட்சை உடைச்சிட்டாங்க.. தோல்விக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

இந்த போட்டியில் எங்களது வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது மிகவும் எளிமையாக இருந்தது. மைதானம் இருவேக தன்மையுடன் இருந்தாலும் பேட்டுக்கு நன்றாக வந்தது. இதுபோன்ற ஒரு துவக்கத்தை தான் இந்த தொடரில் எதிர்பார்த்தோம். இனிவரும் போட்டிகளிலும் நாங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவோம் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement