முதல் 6 ஓவரிலேயே அவங்க 2 பேரும் மேட்சை உடைச்சிட்டாங்க.. தோல்விக்கு பிறகு – டூபிளெஸ்ஸிஸ் வருத்தம்

Faf
- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டியானது நேற்று பெங்களூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.

பெங்களூர் அணி சார்பாக விராட் கோலி ஆட்டமிழக்காமல் 83 ரன்களையும், கேமரூன் கிரீன் 33 ரன்களையும் குவித்தனர். பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 16.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் அவர்கள் பெற்ற வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தனர். அதேபோன்று ஆர்சிபி தாங்கள் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் கூறுகையில் :

முதல் இன்னிங்ஸ்ஸின் போது விக்கெட் இருவேகத்தன்மையுடன் இருந்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பவுலிங்கின் போது ஸ்விங்கானதால் அது மிகவும் உதவியது. விராட் கோலி போன்ற பேட்ஸ்மேனே பந்தை அடிக்க முடியாமல் கஷ்டப்பட்டதை பார்க்கும் போதே உங்களுக்கு மைதானம் ஸ்லோவாக இருந்தது புரிந்திருக்கும்.

- Advertisement -

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின்போது கொல்கத்தா வீரர்களுக்கு சாதகமாக டியூவும் இருந்தது. பவர் பிளேவிலேயே சுனில் நரேன் மற்றும் சால்ட் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தத்தை கொடுத்தார்கள். அவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி வந்ததால் முதலில் ஸ்பின்னர்களை பயன்படுத்தாமல் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினோம்.

இதையும் படிங்க : உண்மையாவே ஆர்சிபி’க்கு கிடைக்காத சாதகம் எங்களுக்கு கிடைச்சுது.. ஈஸியா ஜெயிச்சுட்டோம்.. வெங்கடேஷ் ஐயர் பேட்டி

ஆனால் முதல் ஆறு ஓவர்களிலேயே அவர்கள் போட்டியை உடைத்து விட்டார்கள். இந்த போட்டியில் ஆண்ட்ரே ரசல் அதிகமாக கட்டர் பந்துகளை வீசினார். அதனாலே நாங்கள் வைசாக் விஜயகுமாரை அணிக்குள் கொண்டு வந்தோம். ஆனால் இன்றைய போட்டியில் நாங்கள் நினைத்தது போன்று எதுவும் நடக்கவில்லை. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக தோல்வி அமைந்தது என டூபிளெஸ்ஸிஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement