இப்போ இருக்குற டீம்ல அந்த 2 பேரை சேர்த்தா நமக்குத்தான் அது டேஞ்சர் – சுனில் கவாஸ்கர் கருத்து

gavaskar
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் துவக்கத்திலிருந்தே திணறிய இந்திய அணியானது கோலியின் சிறப்பான பேட்டிங் காரணமாக சுமாரான ஸ்கோரை எட்டியது. 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 151 ரன்கள் குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியானது ஒரு விக்கெட்டை இழக்காமல் 152 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Hafeez

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி தங்களது 2-வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை மோத உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஏனெனில் ஏற்கனவே பாகிஸ்தான் இரண்டு வெற்றிகள் பெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி உள்ள நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் மீதமுள்ள மூன்று அணிகளையும் எளிதில் வீழ்த்த முடியும்.

இதன் காரணமாக நிச்சயம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்புக்கான சாதகத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்திய அணி முயற்சிக்கும். நியூசிலாந்து அணியும் இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரமாக முயற்சி காட்டும். இந்நிலையில் முதல் போட்டியின்போது சொதப்பிய சில வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. அந்த வகையில் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக இஷான் கிஷனையும் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூரையும் சேர்க்கலாம் என்று பலரும் யோசனை கூறி வருகின்றனர்.

IND

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் : இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் நாம் பார்ம் அவுட்டில் இருக்கும் இரண்டு வீரர்களுக்கு பதிலாக மற்ற இரண்டு வீரர்களை சேர்த்தால் எதிரணிக்கு நாம் பயத்தில் இருக்கிறோம் என்று புரிந்து கொள்வார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலிக்கு சுத்தமா லக்கே இல்ல. இந்த ஒரு விஷயத்துல அதிர்ஷ்டம் அடிச்சா மட்டும் தான் – டீம் ஜெயிக்கும்

இதன் காரணமாக மனதளவில் அவர்களுக்கு போட்டி சாதகமாக அதிகமான வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய அணியில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை. அடுத்து வரும் நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement