கோலிக்கு சுத்தமா லக்கே இல்ல. இந்த ஒரு விஷயத்துல அதிர்ஷ்டம் அடிச்சா மட்டும் தான் – டீம் ஜெயிக்கும்

shami
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த பிறகு தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த இரண்டு குழுவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடும்.

varun 1

இந்நிலையில் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளதால் அடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து மீதமுள்ள 3 போட்டிகளிலும் சிறிய அணிகளுடனே மோதும் என்பதால் இந்திய அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனாலும் தற்போது இந்திய அணியின் வீரர்களை தாண்டி மற்றொரு விஷயம் வெற்றிக்கு பாதகமாக அமைந்து உள்ளது. மேலும் இந்த ஒரு விடயத்தில் கோலி ராசி இல்லாதவர் என்றும் கருத்துக்கள் இருந்து வருகின்றன. அதன்படி இந்த சூப்பர் 12-சுற்று போட்டிகளில் இதுவரை நடைபெற்ற முடிந்துள்ள 8 போட்டிகளில் டாஸ் வென்று இரண்டாவது பேட்டிங் செய்யும் அதாவது சேசிங் செய்யும் அணியே 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.

rohith

எனவே இந்த தொடரில் போட்டியில் வெல்வதற்கு டாஸ் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் விராட் கோலியை பொறுத்தவரை எப்போதுமே முக்கியமான பெரிய போட்டியில் டாசில் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறார். அதனால் அவரை ராசி இல்லாத கேப்டன் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : நான் ஒன்னும் அப்படி பட்டவன் இல்ல. இனவெறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து – நற்செய்தி சொன்ன டி காக்

எது எப்படி இருப்பினும் நியூசிலாந்து அணிக்கெதிராக டாசில் வெற்றி பெறும் அதிர்ஷ்டம் கோலிக்கு கிடைத்தால் மட்டுமே போட்டியை வெல்ல முடியும். மேலும் இந்த தொடரில் டாஸ் வெல்லும் அணி சேசிங்கை தேர்வு செய்து தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதால் எந்த அணி டாசில் வெற்றி பெற்றாலும் சேசிங் செய்யவே முற்படும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement