இத்தனை விக்கெட்டுகளை அஷ்வின் அசால்ட்டா எடுக்க காரணமே இதுதான் – சுனில் கவாஸ்கர் பேட்டி

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி எந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

அதன்படி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணியானது 177 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் இந்திய அணி தங்களது முதலில் 400 ரன்களை விளாச 223 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 91 ரன்களுக்கு ஆட்டம் இழந்ததன் காரணமாக இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தமாக 2 இன்னிங்ஸ்சிலும் சேர்த்து நான்கு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மீதமிருந்த 16 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும் குறிப்பாக அஸ்வின் எட்டு விக்கெட், ஜடேஜா ஏழு விக்கெட், அக்சர் ஒரு விக்கெட் என அனைவருமே விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

Marnus Labuschange Ravichandran Ashwin

அதிலும் அஸ்வின் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது பேட்டிங் செய்யும்போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். இந்நிலையில் அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில் : நான் அவரை எப்போதுமே ஒரு சிறப்பான ஆப் ஸ்பின் லெஜண்ட் என்று கருதுகிறேன். அஸ்வின் இப்படி விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு காரணம் யாதெனில் :

- Advertisement -

ஒரு பந்துவீச்சாளராக அவர் எதிரில் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேனை முழுமையாக கணித்து அந்த பேட்ஸ்மேன் எங்கு விளையாடப் போகிறார் என்பதையும் யோசித்து அதற்கு ஏற்றார் போல் பீல்டிங் செட் செய்வார். அதோடு அவருடைய திட்டம் மிகத் தெளிவாக இருப்பதாலேயே அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கின்றன என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : IND vs AUS : 3வது போட்டி மைதானத்தை மாற்றி சதி பண்றாங்க, மீண்டும் ஆஸி ஊடகங்கள் குற்றசாட்டு – கலாய்க்கும் டிகே, ஆகாஷ் சோப்ரா

ஒரு பேட்ஸ்மேன் அஸ்வினுக்கு எதிராக பவுண்டரி அடித்தால் மீண்டும் அவர் அதேபோன்ற பந்தையே வீசி அவரை வீழ்த்துகிறார். இப்படியாக ஒரு பேட்ஸ்மேனின் மனநிலையை கணித்து அவர் அதற்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை செய்து அதே போன்ற பந்துகளில் ஆட்டமிழக்க வைப்பது அவருடைய கிரிக்கெட் மூளையை வெளிக்காட்டுகிறது என கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement