அஷ்வின் போன்று வேறுயெந்த வீரரும் இந்த அளவிற்கு மோசமாக நடத்தப்படவில்லை – சுனில் கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar-and-Ashwin
- Advertisement -

லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய இந்திய அணி 296 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணியானது தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் குவித்து டிக்ளர் செய்ய 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

Rohit

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 234 ரன்கள் மட்டுமே குவித்து 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் மூலம் இரண்டாவது முறையாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை சந்தித்தது.

இந்த இறுதிப் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் விளையாடாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பந்துவீச்சாளராக இருக்கும் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்று இருக்க வேண்டும் என்றும் கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக அழுத்தத்தை தந்திருப்பார் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Ashwin

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அஸ்வின் அணியில் இடம் பெறாதது குறித்து பேசுகையில் கூறியதாவது : இந்திய அணி அஸ்வினை சேர்க்காதது மிகப்பெரிய தவறு.

- Advertisement -

ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் பவுலரான அவர் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசும் திறன் படைத்தவர் அப்படிப்பட்ட அஷ்வினை சேர்க்காதது ஏன் என்று புரியவில்லை. அதோடு அஸ்வின் பேட்டிங்கிலும் தேவையான அளவு தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அஸ்வினை தவிர்த்து வேறு எந்த ஒரு கிரிக்கெட்டரும் இந்த நவீன தலைமுறையில் மோசமாக நடத்தப்படவில்லை.

இதையும் படிங்க : WTC Final : டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பெறாத பிறகு அஷ்வின் வெளியிட்ட – முதல் பதிவு (என்னனு பாருங்க)

உலகின் நம்பர் ஒன் வீரராக இருக்கும் அவர் ஆறாவது முறையாக இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் நிராகரிக்கப்பட்டுள்ளார். கடந்த முறை இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகளில் வெளியே அமர வைக்கப்பட்ட அவர் இந்த முறையும் வெளியே அமர வைக்கப்பட்டது அதிருப்தி அளிப்பதாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement