WTC Final : டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இடம்பெறாத பிறகு அஷ்வின் வெளியிட்ட – முதல் பதிவு

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒரு ஐ.சி.சி தொடரில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்தும், அணி தேர்வு குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதே வேளையில் தமிழக வீரர் அஷ்வினை தேர்வு செய்யாதது தவறு என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் கூட உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை ஏன் தேர்வு செய்யவில்லை? என கேள்வி எழுப்பியிருந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக திகழ்ந்துவரும் அஷ்வின் பேட்டிங்கிலும் பின் வரிசையில் கை கொடுக்க கூடியவர் என்பது நாம் அறிந்ததே.

- Advertisement -

அந்த வகையில் தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவரை பிளேயிங் லெவனில் இணைக்காமல் நான்காவது வேகப்பந்து வீச்சாளராக ஷர்துல் தாகூரை ஏன் இணைத்தனர் என்ற கேள்வியும் அதிக அளவில் எழுந்துள்ளது.

ஆனாலும் கடந்த முறை இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் சென்றதால் தான் தோல்வி சந்தித்தது என்று கூறப்பட்ட வேளையில் இம்முறை மைதானத்தின் தன்மையை கணித்தே இந்த முடிவை எடுத்ததாக ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இருந்தாலும் ஓவல் மைதானத்தில் நிச்சயம் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் சென்று இருக்கலாம் என்றும் அப்படி அஸ்வின் இடம்பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடாத அஸ்வின் இந்த இறுதிப் போட்டிக்கு பிறகு வெளியிட்டுள்ள ஒரு டிவிட்டர் பதிவில் ஆஸ்திரேலிய அணியை வாழ்த்தி தனது பதிவினை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் 10 ஆண்டு சாதனையை முடிவுக்கு கொண்டு வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்

அதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள் என்றும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோற்றது ஏமாற்றம் அளித்திருந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்து முதல் அணியாக இங்கு வந்துள்ளோம் என்பதில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement