ரோஹித் சர்மாவின் 10 ஆண்டு சாதனையை முடிவுக்கு கொண்டு வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்

IND
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

Rohit

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வெல்லாத இந்திய அணி இம்முறையாவது ஐ.சி.சி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

ஏற்கனவே விராட் கோலி தலைமையில் கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி கண்டுள்ளது. இப்படி அடுத்தடுத்த இரண்டு வாய்ப்புகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Shardul-Thakur

அதே வேளையில் கேப்டனாக மிகச் சிறப்பாக கடந்த 10 ஆண்டுகளாக இறுதி போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இருந்து வந்த ரோகித் சர்மா தற்போது அந்த வெற்றி பயணத்தில் முதல் தோல்வியை கண்டுள்ளார். ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு ஏற்றதிலிருந்து இறுதிப் போட்டிகள் என்று வந்தால் நிச்சயம் அவரே வெற்றி பெற்று இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : WTC Final : நீங்க தோத்தது கூட பரவால்ல ஆனா அதை நினச்சா தான் வேதனையா இருக்கு – சௌரவ் கங்குலி ஆதங்கம்

அது ஐபிஎல் தொடராக இருந்தாலும் சரி, இந்திய அணிக்காக விளையாடிய போட்டிகளாக இருந்தாலும் சரி கேப்டனாக அவரது பயணத்தில் இறுதி போட்டியில் விளையாடினால் நிச்சயம் வெற்றி தான் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் முதல் முறையாக இந்த இறுதி போட்டியில் ரோகித் சர்மா தோல்வியை சந்தித்துள்ளது அவரது வெற்றி பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement