WTC Final : நீங்க தோத்தது கூட பரவால்ல ஆனா அதை நினச்சா தான் வேதனையா இருக்கு – சௌரவ் கங்குலி ஆதங்கம்

Ganguly
- Advertisement -

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா உலகின் புதிய டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் மெகா தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது முறையாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறியது. குறிப்பாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தும் இந்தியா தோற்றதே ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

TEam India

- Advertisement -

அப்போட்டியில் ஆரம்பத்திலேயே டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் எடுத்து அழுத்தத்தை எதிரணி பக்கம் திருப்பும் வாய்ப்பை நழுவ விட்டது. மறுபுறம் அந்த தவறை பயன்படுத்திய ஆஸ்திரேலியா ஒரு வாரம் முன்பு வரை ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் 4 ஓவர்கள் மட்டும் வீசி விட்டு முழுமையாக தயாராகாமல் திடீரென இந்த ஃபைனலில் ஒரே நாளில் 17 ஓவர்கள் வரை சோர்வுடன் வீசிய இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்த போதே பாதி வெற்றியை உறுதி செய்தது. மீதி வெற்றி கேப்டன் ரோஹித் சர்மா, புஜாரா, விராட் கோலி உள்ளிட்ட போன்ற நட்சத்திர சீனியர் வீரர்கள் ஒரு அரை சதம் கூட பேட்டிங்கில் சொதப்பியதால் பறிபோனது.

கங்குலி ஆதங்கம்:
அத்துடன் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய வீரராக உலக சாதனை படைத்து தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் 5 பேர் இடது கை வீரர்களாக இருந்தும் தேர்வு செய்யாமல் விட்டது தோல்விக்கு நேரடி காரணமானது. இந்நிலையில் விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜம் என்றாலும் இந்த மாபெரும் ஃபைனலில் நம்பர் ஒன் அணியாக இருந்து கொஞ்சம் கூட போராடாமல் இந்தியா வீழ்ந்தது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.

குறிப்பாக கடைசி நாளில் 280 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 7 விக்கெட்கள் கைவசம் இருந்த போது விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோர் போராடுவார்கள் என்று எதிர்பார்த்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “அது நாங்கள் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகும். ஏனெனில் நாங்கள் 5வது நாளில் நிறைய எதிர்பார்த்தோம். இருப்பினும் விராட் கோலி, ஜடேஜா மற்றும் ரகானே என 3 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்த போது 280 ரன்கள் தேவை என்பது அதிகபட்ச இலக்காகும். குறிப்பாக இங்கிலாந்து போன்ற நாடுகளில் 5வது நாளில் போட்டி மிகவும் வித்தியாசமாக இருக்கும்”

- Advertisement -

“மேலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வானிலை இரட்டை வேகத்தில் மாறக் கூடியது. அதன் காரணத்தாலேயே அந்த ரன்களை கடந்த 100 வருடங்களில் யாருமே அடிக்கவில்லை. மேலும் ரசிகர்கள் சொல்வது போல இந்த போட்டியில் நாம் சற்று சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது பற்றி நானும் ஹர்பஜன் சிங்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேட்டோம். இருப்பினும் தோல்வியை சந்தித்ததால் நாங்கள் கேட்ட கேள்விக்கு அவர் சற்று தடுமாற்றத்துடன் பதில் சொன்னார். ஆனால் சில சமயங்களில் நீங்கள் தோல்விக்கான காரணத்தை கேட்க வேண்டும்”

Sourav Ganguly

“மேலும் கடந்த 4 – 5 வருடங்களில் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இந்திய பேட்ஸ்மேன்களின் சராசரி 26 – 28 என குறைந்த அளவில் மட்டுமே இருக்கிறது. எனவே நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் ஐசிசி போன்ற பெரிய தொடர்களை வெல்ல வேண்டுமெனில் இது போன்ற அளவில் ரன்களை எடுக்க வேண்டும். அதை இந்தியா செய்யவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:இங்க மிஸ் ஆகிருக்கலாம் ஆனா அங்க எங்களோட ஆட்டம் சுதந்திரமா வெறித்தனமா இருக்கும் – ரோஹித் சர்மா அறிவிப்பு

அவர் கூறுவது போல போராடி டிரா செய்திருந்தால் கூட கோப்பை கடை இருக்கும் என்ற நிலையில் கடைசி நாளில் உலக சாதனை இலக்கை சேசிங் செய்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கொஞ்சமும் போராடாமல் மதிய இடைவெளிக்குள் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement