இங்க மிஸ் ஆகிருக்கலாம் ஆனா அங்க எங்களோட ஆட்டம் சுதந்திரமா வெறித்தனமா இருக்கும் – ரோஹித் சர்மா அறிவிப்பு

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் லண்டன் ஓவர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அதனால் 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஒரு ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் வெறும் கையுடன் இந்தியா நாடு திரும்பியது. இத்தனைக்கும் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் சொதப்பிய இந்தியா கொஞ்சமும் போராடாமல் தோற்றது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடந்த 10 வருடங்களில் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் செய்த சொதப்பல்களில் இருந்து எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் இந்தியா காணவில்லை என்பதை இந்த தோல்வி மீண்டும் நிரூபித்துள்ளது. ஏனெனில் உலகிலேயே இடது கை பேட்ஸ்மேன்களை அதிகமாக அவுட்டாக்கி உலக சாதனை படைத்து தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்தும் அஷ்வினை கழற்றி விட்ட தவறான அணி தேர்வு தோல்வியில் முக்கிய பங்காற்றியது.

ரோஹித் பேட்டி:
அத்துடன் கடந்த ஃபைனலில் முழுமையாக தயாராகாமல் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு நேரடியாக களமிறங்கி நியூசிலாந்துடன் தோற்ற இந்தியா இம்முறையும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் ஒரு நாளில் வெறும் 4 ஓவர்கள் மட்டும் வீசி விட்டு முழுமையாக தயாராகாமல் திடீரென இப்போட்டியில் ஒரே நாளில் 17 ஓவர்களை சோர்வாக வீசிய இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது தோல்வியை கொடுத்தது.

TEam Indiaஅது போக ஜாம்பவான்களாக போற்றப்படும் விராட் கோலி, புஜாரா, கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் முக்கிய நேரத்தில் சொதப்பி ஒரு அரை சதம் கூட அடிக்காதது தோல்விக்கு காரணமானது. அதனால் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற்றாலும் 2023 ஓவர் உலகக் கோப்பையையும் இந்தியா வெல்லப் போவதில்லை என்று இப்போதே ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

இருப்பினும் இப்போட்டியில் வெற்றி தவறியிருக்கலாம் ஆனால் சொந்த மண்ணில் நடைபெறும் உலககேகோப்பையில் அனைத்து வீரர்களும் அதிரடியாக விளையாடுவதற்கு தேவையான சுதந்திரம் கொடுக்கப்படும் என கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்துள்ளார். அதனால் அத்தொடரை நிச்சயம் வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பையில் நாங்கள் வித்தியாசமான வழியில் விளையாட முயற்சிக்க உள்ளோம். குறிப்பாக வெற்றி தோல்வி என்பதை பற்றி கவலைப்படாமல் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கு தேவையான சுதந்திரத்தை கொடுக்க உள்ளோம்”

- Advertisement -

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

“ஏனெனில் இந்த போட்டி முக்கியம் அந்த தொடர் முக்கியம் என்று நாங்கள் கருதினாலும் எதுவுமே சாதகமாக நடக்கவில்லை. எனவே நாங்கள் நிச்சயமாக வித்தியாசமான அணுகுமுறையுடன் விளையாட வேண்டியுள்ளது. எங்களுடைய கவனம் எப்போதும் வித்தியாசமானவற்றை முயற்சிப்பதில் இருக்கிறது. இருப்பினும் நாங்கள் நிறைய ஐசிசி தொடர்களில் விளையாடியும் இதுவரை ஒன்றைக் கூட வெல்லவில்லை. எனவே எங்களுடைய உழைப்பு இனிமேல் வித்தியாசமான முயற்சிகளை செய்து வித்தியாசமாக விளையாடுவதாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும் தற்போதைய டெஸ்ட் அணியில் பெரும்பாலான வீரர்கள் 30 வயதை கடந்துள்ளதால் அடுத்த ஃபைனலில் இதே வீரர்கள் விளையாடுவார்களா என்று கேட்டதற்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “எந்த தொடரிலும் அந்த சமயத்தில் எது சாத்தியமாக இருக்கிறதோ அதை நோக்கி தான் நீங்கள் நகர்ந்து விளையாடுவீர்கள். எனவே இப்போதைய நிலையில் நாங்கள் வருங்காலத்தைப் பற்றி அதிகம் நினைக்கவில்லை. இருப்பினும் அதைப் பற்றிய சில பேச்சுவார்த்தைகள் நடக்கிறது”

- Advertisement -

Rohit

“எனவே அடுத்த 2 வருடத்தில் நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாடுகிறோம் அதற்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவை என்பதை முடிவெடுப்போம். மேலும் அடுத்த ஃபைனல் எங்கே நடக்கிறது என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். ஏனெனில் அதை வைத்து தான் நாங்கள் எந்த வகையான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்று முடிவெடுக்க உள்ளோம்” என கூறினார்.

இதையும் படிங்க:சென்னையின் எத்தனை மேட்ச்? 2023 உலக கோப்பை இந்தியாவின் உத்தேச அட்டவணை அறிவிப்பு – விவரம் இதோ

அத்துடன் இங்கிலாந்தில் அடுத்தடுத்த ஃபைனல்களில் தோல்வியை சந்திக்க காரணமாக இருந்த இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பேட்டிங் பற்றி கற்றுக் கொடுக்க முடியாது எனவும் அவர் தமக்கு தாமே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Advertisement