சென்னையின் எத்தனை மேட்ச்? 2023 உலக கோப்பை இந்தியாவின் உத்தேச அட்டவணை அறிவிப்பு – விவரம் இதோ

World
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெறுகிறது. என்ன தான் டி20 உலக கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட தொடரில் கோப்பையை வெல்வதற்கு உலகின் டாப் கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. குறிப்பாக சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

worldcup

- Advertisement -

ஏனெனில் 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து கோப்பையை வென்ற இந்தியா தான் உலகிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற அணியாக உலக சாதனை படைத்தது. மேலும் 1987, 2011 ஆகிய வருடங்களில் பாகிஸ்தான், இலங்கை வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போது தான் உலக கோப்பையை முழுக்க முழுக்க தங்களது மண்ணில் நடத்துகிறது.

உத்தேச அட்டவணை:
அதனால் இந்தியா மட்டுமல்லாது நட்சத்திர வீரர்களைக் கொண்ட வெளிநாட்டு அணிகள் பங்கேற்கும் போட்டிகளையும் பார்க்கும் வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் போது ஐசிசியிடம் இத்தொடருக்கான உத்தேச அட்டவணையை பிசிசிஐ சமர்ப்பித்துள்ளது. அதை விரைவில் ஆராயும் ஐசிசி அங்கீகாரமும் அனுமதி கொடுத்ததும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிடயுள்ளது.

Worldcup

தற்போது அந்த உத்தேச அட்டவணை ரசிகர்களுக்காக சில இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி அக்டோபர் 5ஆம் தேதி அகமதாபாத் நகரில் இருக்கும் உலகின் பெரிய மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியுடன் இத்தொடர் துவங்குகிறது. மேலும் இந்தியா தம்முடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அக்டோபர் 8ஆம் எதிர்கொள்கிறது. அத்துடன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி வரும் 15ஆம் தேதி உலகின் பெரிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் 2 அரையிறுதி போட்டிகளைக் கொண்ட நாக் அவுட் சுற்று நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முறையே மும்பையில் இருக்கும் வான்கடே மைதானத்திலும் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளதாக தெரிய வருகிறது. அதை தொடர்ந்து நடைபெறும் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐசிசி உலககோப்பை 2023 தொடருக்கான இந்திய அணியின் உத்தேச அட்டவணை இதோ:
அக்டோபர் 8 : இந்தியா – ஆஸ்திரேலியா, சென்னை
அக்டோபர் 11 : இந்தியா – ஆப்கானிஸ்தான், டெல்லி
அக்டோபர் 15 : இந்தியா – பாகிஸ்தான், அகமதாபாத்
அக்டோபர் 19 : இந்தியா – வங்கதேசம், புனே
அக்டோபர் 22 : இந்தியா – நியூசிலாந்து, தரம்சாலா
அக்டோபர் 29 : இந்தியா – இங்கிலாந்து, லக்னோ
நவம்பர் 2 : இந்தியா – குவாலிஃபயர் சுற்றில் வெல்லும் அணி
நவம்பர் 5 : இந்தியா – தென்னாபிரிக்கா, கொல்கத்தா
நவம்பர் 11 : இந்தியா – குவாலிபயர் சுற்றில் வெல்லும் அணி, பெங்களூரு

- Advertisement -

அந்த வகையில் மொத்தம் 9 வெவ்வேறு நகரங்களில் தன்னுடைய 9 லீக் போட்டிகளை இந்தியா விளையாடுகிறது. அதில் சென்னையில் இந்தியாவின் முதல் போட்டியும் 2வது அரையிறுதியும் நடைபெறும் நிலையில் எதிரணிகள் விளையாடும் போட்டியும் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது.

Chepauk Chennai Cricket Stadium

இதையும் படிங்க:WTC Final : குற்றத்தை ஒப்புக்கொண்ட ரோஹித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் – இரு அணிகளுக்கும் அபராதம் விதிப்பு

குறிப்பாக பாகிஸ்தான் வரும் அக்டோபர் 27ஆம் தேதி சென்னையில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாட உள்ளது. அத்துடன் நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளும் சேப்பாக்கத்தில் விளையாட உள்ளதால் இம்முறை தமிழக ரசிகர்களுக்கு உலகக்கோப்பை விருந்து காத்திருக்கிறது என்று சொல்லலாம்.

Advertisement