WTC Final : குற்றத்தை ஒப்புக்கொண்ட ரோஹித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் – இரு அணிகளுக்கும் அபராதம் விதிப்பு

Rohit-and-Cummins
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளது. இந்த போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

Rohit

- Advertisement -

கடந்த 2013-ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி தொடரை கைப்பற்றவில்லை என்கிற வருத்தத்தில் இருந்த இந்திய அணிக்கு இம்முறையும் தோல்வியே கிடைத்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் பெருமளவில் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் போது 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 234 ரன்கள் மட்டுமே குவித்ததன் காரணமாக 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பரபரப்பாக நடைபெற்று முடிந்த இந்த இறுதிப் போட்டியில் ஏகப்பட்ட சுவாரசியமான, காரசாரமான விடயங்கள் நடைபெற்று முடிந்தன.

Shubman Gill

அதிலும் குறிப்பாக இந்திய வீரர் சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழந்த விதம் சமூக வலைதளத்தில் பெரும் விவாத பொருளாக மாறியது. அந்த வகையில் சுப்மன் கில் ஆட்டம் இழந்ததாக கூறப்பட்ட அந்த பந்து விக்கெட் இல்லை என்று பலரும் விவாதித்து வந்த வேளையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்குமே அபராதம் விதிக்கப்பட்டுள்ள செய்தி அதிகளவில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் குறிப்பிட்ட நேரத்தை விட பந்துவீச அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்குமான கேப்டன்களும் ஒப்புக்கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கம்மின்ஸ் மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் தங்களது குற்றத்தை ஒப்பு கொண்டதால் போட்டியின் சம்பளத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. (அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும்)

இதையும் படிடுங்க : இப்டியே இருந்தா ஆசிய கோப்பை கூட ஜெயிக்க முடியாது, அந்த முடிவை எடுங்க – பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

அதேபோன்று இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் தனக்கு கொடுக்கப்பட்ட விக்கெட் அறிவிப்பினை மீறி களத்தில் நின்று அம்பயரின் முடிவினை எதிர்த்து பேசியதற்காக 15 சதவீதம் போட்டி ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த இரண்டு ஆண்டுகளில் இவருக்கு முதல் டிமெரிட் பாய்ன்ட்டையும் ஐசிசி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement