2வது மேட்ச்லயாவது ஜெயிக்க அந்த 2 மாற்றங்களை செய்ங்க.. இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் ஆலோசனை

Sunil Gavaskar 22
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அப்போட்டியில் கொஞ்சம் கூட போராடாத இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

அதனால் தென்னாபிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் கனவாகவே போயுள்ளது. அத்துடன் அந்த படுதோல்வியால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 6வது இடத்துக்கு சரிந்து பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:
இதை தொடர்ந்து இத்தொடரை குறைந்தபட்சம் சமன் செய்து கௌரவத்தை காப்பாற்ற 2வது போட்டியில் இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. அதில் முதல் போட்டியில் மோசமான தோல்வி கிடைத்ததால் கண்டிப்பாக இந்திய அணியில் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேப் டவுனில் நடைபெறும் 2வது போட்டியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் குமார் விளையாட வேண்டும் என்று சுனில் காஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் ரவீந்திர ஜடேஜா காயத்திலிருந்து குணமடைந்து விட்டால் கண்டிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக விளையாட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “2வது போட்டியில் ரவீந்திர ஜடேஜா முழுமையாக ஃபிட்டாகி விட்டால் கண்டிப்பாக மீண்டும் விளையாடுவார் என்று நம்புகிறேன். அதே போல பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் குமார் விளையாட வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்”

- Advertisement -

“பொதுவாக கேப் டவுனில் காற்று சற்று வேகமாக இருக்கும். எனவே அங்கு பந்தை காற்றில் ஸ்விங் செய்யக்கூடிய பவுலர்கள் வெற்றிகரமாக செயல்படுவார்கள். அதை முகேஷ் குமார் செய்யக்கூடியவர்” என்று கூறினார். அவர் கூறுவது போல தென் ஆப்பிரிக்கா மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்த முடியுமா என்ற கேள்வி இந்திய அணி நிர்வாகத்திலேயே இருந்தது.

இதையும் படிங்க: இப்போ பிரின்ஸ்ஸா இருக்குற நீங்க கிங் ஆகுறது அவ்ளோ ஈஸி கிடையாது.. சுப்மன் கில்லை எச்சரித்த – ஆகாஷ் சோப்ரா

இருப்பினும் ரவீந்திர ஜடேஜா காயமடைந்ததால் கடைசி நேரத்தில் வாய்ப்பு பெற்ற அவர் பேட்டிங், பவுலிங் துறைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே ஜடேஜா குணமடைந்தால் அஸ்வினுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் என்றே சொல்லலாம். அதே போல அறிமுகப் போட்டியிலேயே ரன்களை வாரி வழங்கி தோல்விக்கு காரணமாக அமைந்த பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக முகேஷ் குமார் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement