இப்போ பிரின்ஸ்ஸா இருக்குற நீங்க கிங் ஆகுறது அவ்ளோ ஈஸி கிடையாது.. சுப்மன் கில்லை எச்சரித்த – ஆகாஷ் சோப்ரா

Aakash-Chopra
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான சுப்மன் கில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தை பிடித்து விளையாடி வருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வருவது தற்போது அனைவரது மதியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்தே சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தமட்டில் அவரது ஆட்டம் கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவை தாண்டி அயல்நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் அவரது ஆட்டம் மிகவும் சுமாராக உள்ளது என்றே கூறவேண்டும். தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் கூட 2, 26 ரன்கள் மட்டுமே குவித்தார். இப்படி அயல்நாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வரும் அவர் விரைவில் அந்த தவறையும் செய்து சரி செய்து கொண்டு வெளிநாடுகளிலும் அசத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் இந்திய அணியின் வருங்கால நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். அதோடு இந்திய அணியின் பிரின்ஸ் என்ற பெயரையும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பிரின்ஸாக இருக்கும் அவர் கிங்காக மாறுவது அவ்வளவு சாதாரணம் கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா எச்சரித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைக்கு கில் அனைவரது மத்தியிலும் பிரின்ஸ் என்று அழைக்கப்பட்டு வருகிறார். ஆனால் அவர் பிரின்ஸிலிருந்து கிங் என்கிற பட்டத்தை நோக்கி செல்வது சாதாரண விடயம் கிடையாது. அது ஒரு கடுமையான பயணமாக இருக்கும். குறிப்பாக சேனா நாடுகளில் அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தயாக வேண்டும்.

- Advertisement -

ஆசிய கண்டத்தை தாண்டி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அவர் நிலைத்து நின்று சதங்களை விளாசி தன்னுடைய ஆட்டத்தை மெருகேற்றினால் மட்டுமே அவர் கிங் என்கிற பட்டத்தை நோக்கி செல்ல முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அவர மாதிரி பவுலருக்கு கோலி – சாஸ்திரி சான்ஸே கொடுக்க மாட்டாங்க.. ரோஹித் – டிராவிட்டை விமர்சித்த மஞ்ரேக்கர்

சர்வதேச கிரிக்கெட்டின் கிங் என்ற பட்டத்தினை வைத்திருக்கும் கிங் கோலி அவ்வளவு எளிதாக அந்த இடத்தை அடையவில்லை. அவர் அனைத்து நாடுகளிலுமே தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அந்த இடத்தை எட்டியுள்ளார் என்றும் அவரது அந்த இடத்தை பிடிக்க செல்லும் சுப்மன் கில்லின் பயணம் என்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement