அவர மாதிரி பவுலருக்கு கோலி – சாஸ்திரி சான்ஸே கொடுக்க மாட்டாங்க.. ரோஹித் – டிராவிட்டை விமர்சித்த மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவை நிஜமாக்கத் தவறிய இந்தியா குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக சென்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில் விராட் கோலி, கே.எல். ராகுல் மற்றும் பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை தவிர்த்து ஏனைய வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக சர்துள் தாகூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரன்களை வள்ளலாக வாரி வழங்கியது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

- Advertisement -

கோலி – சாஸ்திரி கூட்டணி:
அதிலும் குறிப்பாக காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா தம்முடைய அறிமுக போட்டியிலேயே 93 ரன்கள் கொடுத்தது ரசிகர்களை கடுப்பேற்றியது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இருந்திருந்தால் பிரசித் கிருஷ்ணா போன்ற பவுலரை 2வது போட்டியில் அதிரடியாக நீக்கி இருப்பார்கள் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

எனவே 2வது போட்டியில் ரசிகர்கள் முகேஷ் குமார் விளையாடுவதை விரும்பினாலும் ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆகியோர் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என்று தெரிவிக்கும் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முகேஷ் குமார் விளையாடினால் நிறைய ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. அணி நிர்வாகம் வலைப்பயிற்சியில் அவர் எப்படி பந்து வீசுகிறார் என்று பார்த்திருப்பார்கள்”

- Advertisement -

“ஏனெனில் தற்போதைய புதிய அணி நிர்வாகம் பிரசித் கிருஷ்ணாவுக்கு நியாயமான வாய்ப்பு வழங்க விரும்புவார்கள். இருப்பினும் முந்தைய அணி நிர்வாகம் மிகவும் இரக்கமற்றதாக இருந்தது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இது போன்ற விஷயங்களில் மகிழ்ச்சியான முடிவுகளை மட்டுமே எடுத்தார்கள். ஆனால் தற்போதைய அணி நிர்வாகம் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்ல சுப்மன் கில் இப்படி மோசமா தடுமாற இதுதான் காரணம் – சுனில் கவாஸ்கர் கருத்து

“அதே சமயம் இந்த தொடரில் 2 போட்டிகள் மட்டுமே நடைபெறுவதால் 2வது போட்டியில் மாற்றங்கள் நிகழலாம். வெளிநாடுகளில் சர்துள் தாக்கூர் ஓரளவு பேட்டிங் செய்யக்கூடியவர். இந்தியா தங்களுடைய பேட்டிங்கில் மிகவும் நம்பிக்கையுடன் இல்லை. வெளிநாடுகளில் அவ்வப்போது இந்திய அணியின் பேட்டிங் தடுமாறுவதால் சர்துள் தாக்கூரை விளையாட வைக்க அவர்கள் விரும்புகின்றனர்” என்று கூறினார்.

Advertisement