டெஸ்ட் கிரிக்கெட்ல சுப்மன் கில் இப்படி மோசமா தடுமாற இதுதான் காரணம் – சுனில் கவாஸ்கர் கருத்து

Gavaskar-and-Gill
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதன்மை இந்திய அணிக்கு தேர்வானார். மிக இளம் வயதிலேயே இந்திய அணியில் அடியெடுத்து வைத்த சுப்மன் கில் ஆரம்பத்திலிருந்தே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் தற்போது உருவெடுத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் பெரிய வீரராக மாறுவார் என்று பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார். ஆனாலும் ஒருநாள், டி20 போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்திய மண்ணை தாண்டி வெளிநாடுகளில் நடைபெறும் போட்டியில் அவரது தடுமாற்றம் மிக அதிகமாக உள்ளதை அனைவருமே சுட்டிக்காட்டி சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

- Advertisement -

ஆசிய கண்டத்தில் அவரது சராசரி 39.25-ரன்களே இருக்கிறது. அதை தவிர்த்து சேனா நாடுகள் என்று அழைக்கப்படும் (சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) போன்ற நாடுகளில் சுப்மன் கில்லின் சராசரி 25 ரன்களாக மட்டுமே உள்ளது. இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது.

அதேபோன்று செஞ்சூரியன் நகரில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் கூட முதல் இன்னிங்சில் 2 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்களை மட்டுமே குவித்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் காரணமாக அவரது டெஸ்ட் கிரிக்கெட் கரியர் எவ்வாறு செல்லும்? என்பது புரியாத புதிராக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சுப்மன் கில்லின் இந்த தடுமாற்றத்திற்கான காரணத்தை விளக்கியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை கில் தடுமாற்றமாக விளையாட அவர் சற்று அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைப்பதாலே டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்புகிறார். வெள்ளை பந்து கிரிக்கெட்க்கும், சிவப்பு பந்து கிரிக்கெட்க்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உணர வேண்டும். வெள்ளை பந்தை காட்டிலும் சிவப்பு பந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகளவு ஸ்விங் ஆகும். எனவே அவர் டெஸ்ட் கிரிக்கெட்க்கு ஏற்ற ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : யாருமே அசிங்கப்பட தயாரா இல்ல.. தோல்வியை விட அதை தான் ஏத்துக்கவே முடியல.. ஆகாஷ் சோப்ரா

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸின்போது அவர் சரியான ஷாட்களை விளையாடியதாக நினைக்கிறேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். பந்தின் லைனை பிடித்து எவ்வாறு அடிப்பது என்பது போன்ற நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும். சிறிய சிறிய தவறுகளை அவர் செய்து வந்தாலும் அதனை சரிசெய்து நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிப்பார் என சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement