பாண்டியா என்ன செய்வாருன்னு தெரியல.. மும்பை அணியில் பெரிய வீக்னெஸ் இருக்கு.. கவாஸ்கர் பேட்டி

Sunil Gavaskar MI
- Advertisement -

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட உள்ளது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை வருங்காலத்தை கருத்தில் கொண்டு அதிரடியாக கழற்றி விட்டுள்ள அந்த அணி குஜராத்திடமிருந்து ஹர்திக் பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது.

அதற்கு ஏற்கனவே பல லட்சம் மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் எதிர்ப்பையும் தாண்டி தம்மை வளர்த்த மும்பை அணிக்காக கேப்டனாக விளையாடி கோப்பையை வென்று கொடுப்பேன் என்று பாண்டியா நம்பிக்கை தெரிவித்து வருகிறார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் இம்முறை மும்பை அணிக்காக முழுமையாக பந்து வீசுவதற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

- Advertisement -

மும்பையின் வீக்னெஸ்:
இந்நிலையில் மும்பை அணியில் பவுலிங் துறையில் பெரிய வீக்னஸ் இருப்பதாக முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக டெத் ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு சமமாக எதிர்புறம் பந்து வீசுவதற்கு சரியான பவுலர் மும்பையிடம் இல்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனால் என்ன தான் ஒருபுறம் பும்ரா சிறப்பாக பந்து வீசினாலும் எதிர்ப்புறம் ரன்கள் கசிவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கவாஸ்கர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “மும்பை அணியில் டெத் ஓவர் பவுலிங் சுமாராக இருக்கிறது. அவர்களிடம் பும்ரா இருக்கலாம். ஆனால் மற்ற பகுதிகளில் ரன்கள் கசிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே அது தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள பெரிய பலவீனம் என்று நாம் நினைக்கிறேன்” எனக் கூறினார். அவர் கூறுவது போல ஒருபுறம் பும்ரா துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளையும் எடுக்கக் கூடியவர் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

ஆனால் அதற்கு சமமாக தில்சான் மதுசங்கா, லுக் வுட், ஜெரால்ட் கோட்சி போன்ற பவுலர்கள் எதிர்ப்புறம் துல்லியமாக பந்து வீசி பும்ராவுக்கு கை கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அதே போல கடந்த வருடம் லக்னோவுக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்திய ஆகாஷ் மாத்வால் பெரிய அனுபவமில்லாதவராகவே உள்ளார்.

இதையும் படிங்க: சச்சினை விடுங்க.. விராட் கோலி தான் மகத்தான கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேன்.. நவ்ஜோத் சித்து சொல்லும் 2 காரணம்

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அனுபவத்தைக் கொண்ட ஹர்திக் பாண்டியா டெத் ஓவர்களிலும் பந்து வீசி நிலைமையை சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சூரியகுமார் யாதவ் காயத்தால் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதும் மும்பை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ரசிகர்கள் எதிர்ப்பை தாண்டி குறைகளை சரி செய்து மும்பைக்கு பாண்டியா கோப்பையை வென்று கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement