சச்சினை விடுங்க.. விராட் கோலி தான் மகத்தான கிரேட்டஸ்ட் பேட்ஸ்மேன்.. நவ்ஜோத் சித்து சொல்லும் 2 காரணம்

Navjot Sidhu
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா முதன்மை அணியாக திகழ்வதற்கு நிறைய வீரர்கள் சிறப்பாக விளையாடி முக்கிய காரணமாக திகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக பேட்டிங் துறையில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 30000க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து 100 சதங்களை விளாசி 2011 உலகக் கோப்பை உட்பட இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார்.

அதே போல நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி உலகின் அனைத்து அணிகளையும் சிறப்பாக எதிர்கொண்டு இதுவரை 26000+ ரன்கள் 80 சதங்கள் அடித்து ஏராளமான வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள், 2023 உலகக் கோப்பையில் 765 ரன்கள் அடித்து சச்சினையே முந்தியுள்ள அவர் நிறைய உலக சாதனைகளையும் படைத்து வருகிறார்.

- Advertisement -

மகத்தான விராட் கோலி:
அதன் காரணமாக விராட் கோலி தான் இந்தியாவின் மகத்தான பேட்ஸ்மேன் என்பது ஒரு தரப்பு ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் விராட் கோலியை இந்தியாவின் மகத்தான பேட்ஸ்மேன் என்று மதிப்பிடுவேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்து தெரிவித்துள்ளார். குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த ஃபிட்னெஸை கடைபிடிக்கும் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரே மாதிரியாக செயல்படுவதாக அவர் பாராட்டியுள்ளார்.

எனவே தம்மைப் பொறுத்த வரை விராட் கோலி தான் இந்தியாவின் மகத்தான பேட்ஸ்மேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா நம்முடைய அணிக்கு தேவை. அவர்கள் உலகக் கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரர்கள். பொதுவாக ஃபார்ம் என்பது காலை பனி போன்றது. அது எப்போது வேண்டுமானாலும் மறையலாம்”

- Advertisement -

“ஆனால் வீரர்களின் கிளாஸ் என்பது தான் அச்சிடப்பட்ட அங்கீகரமாகும். ஃபிட்னெஸ் போன்ற சில எளிமையான காரணங்களுக்காக நான் விராட் கோலியை இந்தியாவின் லேட்டஸ்ட் பேட்ஸ்மேன் என்று மதிப்பிடுவேன். குறிப்பாக பழைய சரக்கை போல வயது அதிகரிக்க அதிகரிக்க அவர் இன்னும் ஃபிட்டாகி வருகிறார். டெக்னிக்கல் அளவிலும் சிறந்தவராக திகழும் அவர் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் தன்னை மாற்றியமைக்கும் வினோதமான திறமையை கொண்டுள்ளார். இது ரோகித்துக்கும் பொருந்தும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: டேவிட் வார்னர் இல்ல.. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனை அறிவித்த நிர்வாகம் – விவரம் இதோ

முன்னதாக ஐபிஎல் துவங்கப்பட்ட 2008 காலகட்டங்களில் நவ்ஜோத் சித்து முதன்மை வர்ணனையாளராக செயல்பட்டார். ஆனால் அதன் பின் அரசியல் போன்ற காரணங்களால் விலகிய அவர் தற்போது பல வருடங்கள் கழித்து மீண்டும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார். அது இந்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement