டேவிட் வார்னர் இல்ல.. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனை அறிவித்த நிர்வாகம் – விவரம் இதோ

DC
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் தங்களது அணியின் வீரர்களை தயார் செய்து தற்போது தீவிர பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரானது துவங்க இன்னும் சில தினங்கள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் டெல்லி அணியின் நிர்வாகம் தற்போது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதையும் தவறவிட்டதால் டேவிட் வார்னர் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டிருந்தார். அதன்காரணமாக அவரே இந்த ஆண்டும் கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் இந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு மீண்டும் ரிஷப் பண்ட் திரும்பியிருக்கிறார். இப்படி டெல்லி அணிக்கு அவர் திரும்பியிருந்தாலும் விக்கெட் கீப்பிங் செய்யாமல் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

மேலும் அவருடைய உடற்தகுதி எவ்வாறு இருக்கிறது? முழு போட்டியில் பங்கேற்கும் அளவிற்கு அவருடைய பிட்னஸ் இருக்கிறதா? என்பது தெரியாததால் டேவிட் வார்னரே கேப்டனாகவும், ரிஷப் பண்ட் இம்பேக்ட் பிளேயராகவும் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது டெல்லி அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி :

இதையும் படிங்க : விராட் கோலி பத்தி நீங்க நெனைக்குறது தப்பு.. அவரு இல்ல இந்தியன் டீமே இல்ல – எம்.எஸ்.கே பிரசாத்

தேசிய கிரிக்கெட் அகாடமி ரிஷப் பண்ட் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று அறிவித்ததால் இந்த தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டே செயல்படுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய பரத் ஜிண்டால் கூறுகையில் : ரிஷப் பண்ட்டை மீண்டும் எங்களது அணியின் கேப்டனாக வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சீசனில் எங்களுடைய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement