விராட் கோலி பத்தி நீங்க நெனைக்குறது தப்பு.. அவரு இல்ல இந்தியன் டீமே இல்ல – எம்.எஸ்.கே பிரசாத்

Prasad-and-Kohli
- Advertisement -

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு சென்ற இந்திய அணி 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ஐசிசி கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து ஐசிசி கோப்பையை தவறவிட்டது.

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு கோடை காலத்தில் ஜூன் மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு தவறவிட்ட கோப்பையை இம்முறை கைப்பற்றியாக வேண்டிய முனைப்புடன் இந்திய அணி காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் விராட் கோலி அணியிலிருந்து கழட்டிவிடப்படுவார் என்றும் டி20 கிரிக்கெட்டுக்கு இனி விராட் கோலி செட்டாக மாட்டார் என்ற ஒரு பேச்சு பரவலாக இருந்து வருகிறது.

மேலும் இதுகுறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் விராட் கோலி இல்லாமல் டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி செல்லாது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு விராட் கோலி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக விளையாடினால் தான் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று நீங்கள் நினைப்பது தவறு. விராட் கோலி எப்போதுமே பார்மில் தான் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க : ஐசிசி’க்கே விபூதி அடித்த ஹஸரங்கா? இலங்கை வாரியத்துடன் சேர்ந்து இப்படி ஒரு மாஸ்டர் பிளானா.. ரசிகர்கள் வியப்பு

அவருடைய தரத்தில் எந்த ஒரு குறைபாடும் கிடையாது. நீண்ட காலமாகவே விராட் கோலி சிறப்பான பார்மில் இருக்கும் அவர் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் முக்கிய வீரராக இடம் பிடிப்பார் என எம்.எஸ்.கே பிரசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement