ஐசிசி’க்கே விபூதி அடித்த ஹஸரங்கா? இலங்கை வாரியத்துடன் சேர்ந்து இப்படி ஒரு மாஸ்டர் பிளானா.. ரசிகர்கள் வியப்பு

Hasaranga ICC 2
- Advertisement -

வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. அந்தத் தொடரில் இலங்கை அணிக்காக மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதாக நட்சத்திர வீரர்கள் வணிந்து ஹஸரங்கா அறிவித்துள்ளார். குறிப்பாக 26 வயது மட்டுமே நிரம்பிய அவர் ஏற்கனவே 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார். அப்போது ஐபிஎல் போன்ற டி20 தொடரில் கவனம் செலுத்தி தன்னுடைய வெள்ளைப் பந்து கேரியரை நீட்டிக்க விரும்பிய அவர் கடந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அந்த சூழ்நிலையில் திடீரென்று நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் விளையாடுவதாக அவர் அறிவித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் வங்கதேசத்துக்கு எதிரான அந்த 2 போட்டிகளிலும் ஹசரங்கா விளையாடுவதற்கு அதிரடியான தடை விதிப்பதாக ஐசிசி அறிவித்தது ரசிகர்களுக்கு மற்றொரு ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

ஐசிசிக்கே விபூதி:
அதாவது வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 37வது ஓவரில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்காததால் நடுவரிடமிருந்து கோபமாக தனது தொப்பியை பிடுங்கிய ஹசரங்கா சில வார்த்தைகளை சொல்லி கேலி செய்தார். அதனால் 7.6 அடிப்படை விதிமுறையை மீறிய அவருக்கு 3 கருப்புப் புள்ளிகள் வழங்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த மாதம் தம்புலாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் நோ-பால் வழங்காததால் நடுவரிடம் அவர் வாக்குவாதம் செய்தார். அதனால் ஏற்கனவே 5 கருப்புப் புள்ளிகளை பெற்ற அவருக்கு வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி தடை விதித்திருந்தது. அந்த வகையில் தற்போது பெற்ற 3 புள்ளிகளையும் சேர்த்து கடந்த 24 மாதங்களில் 8 கருப்புப் புள்ளிகளை பெற்றதால் அவருக்கு மீண்டும் 2 டெஸ்ட் அல்லது 4 ஒருநாள் அல்லது 4 டி20 போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.

- Advertisement -

ஆனால் இந்த அறிவிப்பின் படி ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதாக அறிவிக்காமல் போயிருந்தால் ஹஸரங்கா 2024 டி20 உலகக் கோப்பையில் 4 போட்டிகளில் விளையாட முடியாது. எனவே தவறை செய்த்தால் தடை வரும் என்பதை நன்றாக தெரிந்து தான் இலங்கை வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெயருக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பதாக ஹஸரங்கா அறிவிப்பு வெளியிட்டதாக ரசிகர்கள் தற்போது சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: டேவிட் வார்னர் கேப்டனா? ரிஷப் பண்ட் எப்படி விளையாடுவார்? டெல்லி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏனெனில் அதை உண்மை என்று நம்பிய ஐசிசி அவருக்கு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு தடை விதித்துள்ளது. அதனால் டி20 உலகக் கோப்பையில் ஹஸரங்கா முழுமையாக விளையாட உள்ளார். அந்த வகையில் அவருடைய மாஸ்டர் பிளானை பார்க்கும் ரசிகர்கள் ஐசிசிக்கே விபூதி அடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement