டேவிட் வார்னர் கேப்டனா? ரிஷப் பண்ட் எப்படி விளையாடுவார்? டெல்லி நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Rishabh Pant 3
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரிசப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து விளையாட உள்ளார். கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சந்தித்த காயத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அதனால் 2023 ஐபிஎல், டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் விளையாடாத அவர் ஒரு வழியாக தற்போது முழுமையாக குணமடைந்து விளையாட உள்ளார். இருப்பினும் காயத்திலிருந்து குணமடைந்ததும் நேரடியாக விளையாட வரும் அவரால் மிகவும் கடினமான விக்கெட் கீப்பிங் வேலையை செய்ய முடியுமா அல்லது பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவாரா என்ற கேள்வி இருந்தது.

- Advertisement -

கேப்டன் யார்:
சொல்லப்போனால் இம்பேக்ட் விதிமுறையை பயன்படுத்தி இம்முறை அவர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என்ற செய்திகளும் வெளியாகின. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த வருடம் அணியை வழி நடத்திய டேவிட் வார்னர் இம்முறையும் டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் ரிசப் பண்ட்
தங்களுடைய கேப்டனாக செயல்படுவார் என்று டெல்லி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது பற்றி டெல்லி அணியின் உரிமையாளர் பர்த் ஜிண்டால் பேசியது பின்வருமாறு. “ரிஷப்பை மீண்டும் எங்கள் கேப்டனாக வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். உறுதி மற்றும் அச்சமின்மை எப்போதும் அவருடைய கிரிக்கெட்டின் பிராண்டாக இருக்கிறது. அதை பயன்படுத்தி அவர் குணமடைந்து வந்ததில் ஆச்சரியப்படுவதற்கில்லை. புதுப்பிக்கப்பட்ட வீரியம், ஆர்வம் மற்றும் உற்சாகத்துடன் ஒரு புதிய சீசனில் அவர் எங்களுடைய அணியை வழி நடத்துவதை பார்ப்பதற்காக காத்திருக்க முடியவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் கடந்த சில மாதங்களாகவே ரிஷப் பண்ட் என்சிஏவில் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளையும் செய்து வந்தார். அதன் காரணமாக இம்முறை மீண்டும் அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் டெல்லி அணிக்காக முழுமையாக விளையாட உள்ளார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க: என்னை அந்த பெயரைச் சொல்லி கூப்பிடாதீங்க.. இந்த வருஷம் ரெண்டாக்குவோம்.. விராட் கோலி பேட்டி

முன்னதாக ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடும் பட்சத்தில் 2024 டி20 உலகக் கோப்பையிலும் அவரை இந்திய அணியில் தேர்வு செய்வோம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே டெல்லி அணிக்காக 14 மாதங்கள் கழித்து விளையாடும் ரிஷப் பண்ட் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடி கம்பேக் கொடுப்பதற்கு பிரகாசமான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement