என்னை அந்த பெயரைச் சொல்லி கூப்பிடாதீங்க.. இந்த வருஷம் ரெண்டாக்குவோம்.. விராட் கோலி பேட்டி

Virat Kohli 5
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்கி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்த தொடரில் வழக்கம் போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. சொல்லப்போனால் சமீபத்தில் நிறைவு பெற்ற மகளிர் ஐபிஎல் தொடரில் டெல்லியை தோற்கடித்து பெங்களூரு முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அந்த வகையில் ஈ சாலா கப் கனவு நிஜமானதை தற்போது ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் தங்களுக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்த மகளிர் ஆர்சிபி அணிக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் மார்ச் 19ஆம் தேதி எம் சின்னசாமி மைதானத்தில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. அதில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிரணிக்கு ஆடவர் ஆர்சிபி அணியினர் இருபுறமும் நின்று கைதட்டி வரவேற்று கௌரவித்தனர்.

- Advertisement -

விராட் கோலி நம்பிக்கை:
குறிப்பாக கோப்பையுடன் களத்திற்குள் வந்த மந்தனாவை தலைமையிலான மகளிர் அணியை விராட் கோலி, கிளன் மேக்ஸ்வெல், முகமது சிராஜ் போன்ற வீரர்கள் இருபுறமும் நின்று கைதட்டி வரவேற்றனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற அந்த விழாவின் ஒரு பகுதியில் மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை எப்படி உணர்கிறீர்கள் “கிங்” என்று விராட் கோலியிடம் தொகுப்பாளர் கேட்டார்.

அதற்கு தம்மை கிங் என்றழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் விராட் என்று மட்டும் அழைக்குமாறு கூறினார். மேலும் மகளிர் அணியை போல இம்முறை ஆடவர் அணியும் சிறப்பாக விளையாடி ஆர்சிபி ரசிகர்களுக்கு இரண்டாவது கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவித்த விராட் கோலி இது பற்றி பேசியது பின்வருமாறு. “முதலில் நாங்கள் சென்னைக்கு செல்ல வேண்டும். அதற்காக தனி விமானம் காத்திருப்பதால் நேரமில்லை”

- Advertisement -

“நீங்கள் என்னை அந்த வார்த்தையை பயன்படுத்தி அழைப்பதை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் நீங்கள் என்னை அப்படி அழைக்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என்று டு பிளேஸியிடம் சொன்னேன். என்னை விராட் என்று அழைத்தால் போதும். இந்த வருடம் நாங்கள் கோப்பையை இரட்டிப்பாக மாற்றுவோம் என்று நம்புகிறேன். அது மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்”

இதையும் படிங்க: பாவம் டெஸ்ட் கம்பேக் இப்படியா ஆகணும்.. மீண்டும் ஹஸரங்காவை தடை செய்த ஐசிசி.. காரணம் என்ன?

“நான் எப்போதும் கோப்பையை முதல் முறையாக வெல்லப் போகும் ஆர்சிபி அணியில் அங்கமாக இருக்க முயற்சிக்கிறேன். எனது திறமை மற்றும் அனுபவத்தைக் கொண்டு கோப்பையை வென்று ரசிகர்கள் மற்றும் அணிக்கு கொடுக்க என்னால் இயன்றதை முயற்சிப்பேன். ஐபிஎல் கோப்பையை வெல்வது எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கனவாகும்” என்று கூறினார்.

Advertisement