பாவம் டெஸ்ட் கம்பேக் இப்படியா ஆகணும்.. மீண்டும் ஹஸரங்காவை தடை செய்த ஐசிசி.. காரணம் என்ன?

Hasaranga SL
- Advertisement -

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி அங்கு முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இலங்கையை தோற்கடித்து வென்ற வங்கதேசம் தக்க பதிலடி கொடுத்தது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.

மார்ச் 22ஆம் தேதி சைலட் நகரில் துவங்கும் அந்தத் தொடரில் மீண்டும் இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளதாக நட்சத்திர வீரர் வணிந்து ஹஸரங்கா அறிவித்துள்ளார். ஏற்கனவே 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் கவனம் செலுத்துற்காக கடந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

- Advertisement -

ஐசிசி தடை:
ஆனால் இப்போது மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ளதாக அவர் அறிவித்த்துள்ளார். இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான இந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஹசரங்கா விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 37வது ஓவரை வீசி முடித்த பின் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்காததால் கோபமான ஹஸரங்கா அம்பயரிடமிருந்து தன்னுடைய தொப்பையை பறித்து கேலி செய்துள்ளார்.

எனவே 7.6 விதிமுறையை மீறி நடுவரின் தீர்ப்பை மதிக்காமல் கேலி செய்ததற்காக அவருக்கு 3 கருப்பு புள்ளிகள் கொடுக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் ஏற்கனவே கடந்த மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தம்புலாவில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் நோ-பால் வழங்காததால் கோபமடைந்த ஹசரங்கா அம்பயரிடம் வாக்குவாதம் செய்து சண்டையில் ஈடுபட்டு விமர்சித்தார். அதனால் 5 கருப்பு புள்ளிகளை பெற்ற அவர் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் தடையால் விளையாடவில்லை.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள 3 கருப்பு புள்ளிகளையும் சேர்த்து கடந்த 24 மாதங்களுக்குள் ஹசரங்கா 8 கருப்பு புள்ளிகளை பெற்றுள்ளார். அதன் காரணமாக அவருக்கு 2 டெஸ்ட் அல்லது 4 ஒருநாள் அல்லது 4 டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதில் முதலாவதாக வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் வருகிறது.

இதையும் படிங்க: உண்மையான ரசிகர்களை இப்படி நடத்துவீங்க.. ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் செயலால் – அதிருப்தியில் ரசிகர்கள்

அதனால் வங்கதேசத்துக்கு எதிரான அந்த 2 போட்டிகளில் விளையாட அவருக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. அந்த வகையில் ஆசை ஆசையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த அவருக்கு இப்படி ஒரு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இது போக அதே போட்டியில் நடுவரிடம் கை கொடுக்கும் போது கெட்ட வார்த்தைகள் திட்டிய குசால் மெண்டிஷ்க்கு 50% சம்பளம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement