உண்மையான ரசிகர்களை இப்படி நடத்துவீங்க.. ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் செயலால் – அதிருப்தியில் ரசிகர்கள்

RCB
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 2024-ஆம் ஆண்டிற்கான 17-ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கயிருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.

இதுவரை நடைபெற்று முடிந்த 16 சீசனங்களில் ஒருமுறை கூட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றவில்லை என்றாலும் மும்பை, சென்னை போன்ற அணிகளுக்கு நிகராக பல மடங்கு ரசிகர்களைக் கொண்ட மாபெரும் அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி பெரிய புகழை பெற்றுள்ளது.

- Advertisement -

குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக ஆர்.சி.பி அணி கோப்பையை கைப்பற்ற வில்லை என்றாலும் ரசிகர்கள் தொடர்ச்சியாக தங்களது ஆதரவினை பெங்களூரு அணிக்கு வழங்கி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கோப்பை கிடைக்காவிட்டாலும் நாங்கள் ஆர்சிபி அணியின் ரசிகர்களாகவே இருப்போம் என்றும் கூறுமளவிற்கு உண்மையான ரசிகர்களை அந்த அணியை கொண்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக ஒரு புதிய விடயத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ள ஆர்சிபி அணி அந்த நிகழ்வினை காண ஒரு மணி நேரத்திற்கு 99 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் இரண்டு மாதங்கள் தினமும் நடைபெறும் ஐபிஎல் தொடர் முழுவதுமே இலவசமாக ஒளிபரப்பப்படும் வேளையில் உண்மையான ரசிகர்கள் இருக்கும் பெங்களூரு அணியின் நிர்வாகம் இப்படி ஒருமணி நேர நிகழ்ச்சிக்கு 99 ரூபாய் கேட்பது நியாயமல்ல என்று பெங்களூரு அணியின் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க : அதுக்காக விராட் கோலியுடன்.. ஆர்சிபி கோப்பை ஜெயிச்ச என்னை கம்பேர் பண்ணாதீங்க.. மந்தனா வேண்டுகோள்

மேலும் பெங்களூரு அணி பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் உண்மையாக பின் தொடரும் ரசிகர்களை இப்படிதான் நடத்துவதா? என்றும் பெங்களூரு அணி நிர்வாகத்தின் இந்த செயலை கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement