அதுக்காக விராட் கோலியுடன்.. ஆர்சிபி கோப்பை ஜெயிச்ச என்னை கம்பேர் பண்ணாதீங்க.. மந்தனா வேண்டுகோள்

Smriti Mandhana 2
- Advertisement -

மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஸ்மிருத்தி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. கடந்த வருடம் லீக் சுற்றுடன் வெளியேறியதால் 2008 முதல் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வரும் ஆடவர் அணியை போலவே மகளிர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லாது என்ற கிண்டல்கள் எழுந்தன.

இருப்பினும் அந்த கிண்டல்களை தற்போது உடைத்துள்ள பெங்களூரு முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளது. அதனால் அந்த வெற்றியை தற்போது ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடியே தீர்த்து வருகின்றனர். குறிப்பாக இந்த வெற்றியால் விரைவில் துவங்கும் ஆடவர் ஐபிஎல் 2024 தொடரிலும் பெங்களூரு கோப்பையை வெல்லும் என்று ஆழமான நம்பிக்கை ஆர் சி பி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கம்பேரிசன் வேண்டாம்:
அதே சமயம் 2வது வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த ஸ்மிருதி மந்தனாவை பார்த்து எப்படி வெல்ல வேண்டும் என்பதை விராட் கோலி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கிண்டல்களும் காணப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலியுடன் தம்மை ஒப்பிட வேண்டாம் என்று ஸ்மிருதி மந்தனா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் 18 என்ற தங்களுடைய ஜெர்ஸி நம்பர் ஒரே மாதிரியாக இருப்பதைப் பற்றியும் சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “மகளிர் கோப்பையை வென்றது ஒன்று. ஆனால் மற்றொரு 18வது நம்பர் (விராட் கோலி) இந்தியாவுக்காக நிறைய சாதனைகளை செய்துள்ளது. அது பெரியதாகும். எனவே என்னுடைய கேரியர் இருக்கும் நிலைமைக்கு ஏற்கனவே நிறைய சாதித்து அவருடன் ஒப்பிடுவது சரியானது என்று நான் நினைக்கவில்லை. அப்படி ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை”

- Advertisement -

“ஏனெனில் மகத்தானவற்றை சாதித்துள்ள அவர் உத்வேகத்தை கொடுப்பவராக இருக்கிறார். எனவே இந்த கோப்பை பல விஷயங்களை தீர்மானிக்காது. நாங்கள் அனைவரும் அவரை மதிக்கிறோம். இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு எப்போதும் மரியாதை இருப்பதாக நான் உணர்கிறேன். எங்களுடைய ஜெர்சி நம்பர் எனக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை. ஜெர்சி நம்பர் என்பது தனிப்பட்ட நபர்களின் விருப்பமான தேர்வாகும்”

இதையும் படிங்க: சிங்கப்பெண்களை கொண்டாடிய ஆர்சிபி ரசிகர்கள்.. மிகப்பெரிய கெளரவம் வழங்கி விராட் கோலி கொடுத்த மெசேஜ்

“அது அவர் எப்படி கிரிக்கெட்டை விளையாடுகிறார். நான் எப்படி விளையாடுகிறேன் என்பதை தீர்மானிக்காது” என்று கூறினார். இதை தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை தன் சொந்த மண்ணில் பெங்களூரு எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement