சிங்கப்பெண்களை கொண்டாடிய ஆர்சிபி ரசிகர்கள்.. மிகப்பெரிய கெளரவம் வழங்கி விராட் கோலி கொடுத்த மெசேஜ்

Mandhana RCB.jpeg
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. கடந்த வருடம் ஸ்மிருதி மந்தனா தலைமையில் சுமாராக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியதால் ஆடவர் அணியை போலவே மகளிர் ஆர்சிபி அணியும் கோப்பையை வெல்லாது என்ற வழக்கமான கிண்டல்கள் எழுந்தன.

ஆனால் இந்த வருடம் சிறப்பாக விளையாடி அந்த கிண்டல்களை உடைத்த ஆர்சிபி அணி 2வது வருடத்திலேயே மகளிர் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் காலம் காலமாக ஏங்கி வந்த கோப்பையை தற்போது வென்று விட்டதால் பெங்களூரு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் முதல் முறையாக கோப்பையை வென்று கொடுத்த மகளிர் ஆர்சிபி அணிக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

- Advertisement -

கொண்டாடிய ஆர்சிபி:
மார்ச் 19ஆம் தேதி நடைபெற்ற அந்த விழாவில் எம் சின்னசாமி மைதானத்தில் ஒரு இருக்கை கூட காலியாக இல்லாத அளவுக்கு பெங்களூரு ரசிகர்கள் தங்களுடைய மகளிர் அணியை கொண்டாடுவதற்காக கூட்டமாக சேர்ந்தனர். அதைத்தொடர்ந்து ஸ்மிருதி மந்தனா தலைமையிலான மகளிர் ஆர்சிபி அணி மைதானத்திற்கு வந்தனர். அப்போது ஆடவர் ஆர்சிபி அணியினர் இருபுறமும் நின்று கைதட்டி அவர்களை வரவேற்று பாராட்டு கொடுத்தனர்.

குறிப்பாக கோப்பையுடன் வந்த கேப்டன் மந்தனாவுக்கு ஜாம்பவான் விராட் கோலி பாராட்டு தெரிவித்தது ஆர்சிபி ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அத்துடன் முகமது சிராஜ், கிளன் மேக்ஸ்வெல் உள்ளிட்ட அனைத்து ஆர்சிபி வீரர்களும் தங்களுடைய மகளிர் அணிக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியினர் சின்னசாமி மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

- Advertisement -

அப்போது ஆஸ்திரேலியாவுக்கு சென்று விட்டதால் அந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெரி வீடியோ காலில் வந்து ஆர்சிபி ரசிகர்களின் பாராட்டுகளை பார்த்தார். அதன் பின் நார்வேயைச் சேர்ந்த பிரபல பாடகர் ஆலன் வால்க்கர் தலைமையிலான இசைக் குழுவினர் மைதானத்திற்கு வந்திருந்த ஆர்சிபி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் இசை நிகழ்ச்சி நடத்தி மகிழ்வித்தனர்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : தோனியின் சிஎஸ்கே படைக்கு சவால் விடுமா லக்னோ அணி.. வரலாற்று புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

இறுதியாக அந்த நிகழ்ச்சியில் விராட் கோலி பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் கோப்பையை வெல்வது எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது எனது கனவாகும். இந்த ஆண்டு கோப்பையை வென்று அதை நாங்கள் இரட்டிப்பாக்குவோம் என்று நம்புகிறேன்” என கூறினார். இதைத்தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னையில் அதன் சொந்த மண்ணில் பெங்களூரு எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement