ஐபிஎல் 2024 : தோனியின் சிஎஸ்கே படைக்கு சவால் விடுமா லக்னோ அணி.. வரலாற்று புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

- Advertisement -

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரலாற்றில் 17வது முறையாக வரும் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்லும் ஒரு அணியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதற்கு மீதமுள்ள 9 எதிரணிகளில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் சவாலை கொடுத்து கோப்பையை வெல்லுமா என்பதை பற்றிய அலசலை பார்க்கலாம்.

முதலாவதாக கடந்த சீசனில் காயத்தால் பாதியிலேயே விளையாடாத கேப்டன் கேஎல் ராகுல் இம்முறை விளையாடுவது லக்னோவுக்கு பலமாகும். ஆனால் ஓப்பனிங்கில் வெளுத்து வாங்கக்கூடிய குவிண்டன் டீ காக்’கிற்கு நிகராக கடந்த வருடங்களை போல் தடவல் பேட்டிங்கை வெளிப்படுத்தாமல் ராகுல் அதிரடியாக விளையாடுவது வெற்றிக்கு அவசியம். அவர்களுடன் நிக்கோலஸ் பூரான் அதிரடியாக விளையாடி வெற்றியை பறிக்கக் கூடியவர் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

சென்னை – லக்னோ:
அத்துடன் கெயில் மேயர்ஸ் லக்னோவின் டாப் ஆர்டரை வலுப்படுத்தும் அதிரடி பேட்ஸ்மேனாக இருக்கிறார். மிடில் ஆர்டரில் தேவதூத் படிக்கல் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் உள்ளனர். அந்த இருவருமே கடந்த சீசன்களில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்பதை உணர்ந்து இம்முறை விளையாடுவது வெற்றிக்கு அவசியமாகிறது.

அதே போல இளம் இந்திய வீரர்கள் ஆயுஷ் படோனி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் கடந்த சீசனில் சுமாராக விளையாடியது தோல்வியை கொடுத்தது. எனவே இம்முறை அவர்களும் அதிரடியாக விளையாடுவது அவசியமாக பார்க்கப்படும் நிலையில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் ஃபினிஷிங் செய்யும் திறமையை கொண்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

அதே போல சுழல் பந்து வீச்சுத் துறையில் இளம் வீரர் ரவி பிஷ்னோய், க்ருனால் பாண்டியா ஆகியோர் நல்ல ஸ்பின்னர்களாகவே இருக்கின்றனர். ஆனால் வேகப்பந்து வீச்சு துறையில் மோசின் கான் தவிர்த்து சிவம் மாவி, யாஸ் தாக்கூர், மணிமாறன் சித்தார்த் ஆகியோர் ஐபிஎல் தொடரில் அசத்திய அனுபவமில்லாதவர்களாக இருக்கின்றனர். அதே சமயம் டேவிட் வில்லி, கிறிஸ் ஓக்ஸ், நவீன்-உல்-ஹக் போன்ற வெளிநாட்டு பவுலர்கள் லக்னோவுக்கு வலு சேர்ப்பார்கள் என்று நம்பலாம்.

சிஎஸ்கே அணியை பொறுத்த வரை கடந்த வருடம் 500 ரன்கள் குவித்த டேவோன் கான்வே காயத்தால் விளையாட மாட்டார் பின்னடைவாகும். இருப்பினும் 2023 உலகக்கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா ஓப்பனிங்கில் ருத்ராஜுடன் களமிறங்கி அந்த குறையை சமாளிக்கும் தரத்தை கொண்டுள்ளார். அதைத்தொடர்ந்து புதிதாக வாங்கப்பட்ட நியூஸிலாந்தின் ஆல் ரவுண்டர் டார்ல் மிட்சேல், நியூசிலாந்தின் மொயின் அலி, அஜிங்கிய ரஹானே ஆகிய அனுபவ வீரர்கள் மிடில் ஆர்டருக்கு வலு சேர்க்கின்றனர்.

- Advertisement -

அதே போல லோயர் மிடில் ஆர்டரில் சிக்சர் மெஷின் என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் ஃபினிஷர்களாக அசத்த தயாராக உள்ளனர். சுழல் பந்து வீச்சுத் துறையில் மஹீஷ் தீக்ஷனாவுடன் ஜடேஜா, மிட்சேல் சான்ட்னர் மற்றும் மொயின் அலி ஆகியோர் பேட்ட்டிங்கிலும் அசத்தக்கூடியவர்களாக பலம் சேர்க்கின்றனர்.

இறுதியாக வேகப்பந்து வீச்சுத் துறையில் 2018, 2021 கோப்பையை வெல்ல உதவிய சர்துல் தாகூர், தீபக் சஹர் ஆகியோர் மீண்டும் இம்முறை ஜோடி சேர்ந்து பந்து வீச உள்ளனர். அதே போல கடந்த வருடங்களில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேக்கர் ஆகியோர் காயமடைந்துள்ள பதிரனா மற்றும் முஸ்தபிசூர் ரஹ்மான் இடத்தை நிரப்பும் அளவுக்கு நல்ல தரத்தை கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: வரம்பு மீறிய ரோஹித் ரசிகர்கள்.. கடைசில பாண்டியாவை இப்படி காலி பண்ணிடீங்களேப்பா – என்ன நடந்தது?

மொத்தத்தில் ராகுல் தலைமையில் அதிரடியாக விளையாடி சென்னையை வீழ்த்துவதற்கான பலம் லக்னோ அணியிடம் இருக்கிறது. ஆனால் ராகுலை விட அதிகப்படியான அனுபவம் கொண்ட கேப்டன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியிடம் அதை சமாளித்து 6வது கோப்பையை வெல்வதற்கான தரமும் அனுபவமும் உள்ளது என்றால் மிகையாகாது. சென்னை மற்றும் லக்னோ அணிகள் இதுவரை 3 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

Advertisement