வரம்பு மீறிய ரோஹித் ரசிகர்கள்.. கடைசில பாண்டியாவை இப்படி காலி பண்ணிடீங்களேப்பா – என்ன நடந்தது?

Pandya-and-Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் தினங்களில் துவங்கவுள்ளது. அதன்படி மார்ச் 22-ஆம் தேதி துவங்கும் இந்த ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இம்முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் எந்த அணி கோப்பையை கைப்பற்றப்போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கியதால் அனைத்து அணிகளுமே தற்போது பலமான அணிகளாக பார்க்கப்படுகின்றன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக குஜராத் அணியிடம் இருந்து ஹார்டிக் பாண்டியாவை விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கேப்டனாகவும் நியமித்து ரோகித் சர்மா சாதாரணமான வீரராக விளையாடுவார் என்றும் அறிவித்திருந்தது. இதன் காரணமாக மும்பை அணி எவ்வளவு பலமாக இருக்கிறதோ அதே வேளையில் பல்வேறு விமர்சனங்களையும் சமீபகாலமாகவே சந்தித்து வருகிறது.

ஏனெனில் ஐந்து முறை கோப்பையை வென்ற சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு ஹார்டிக் பாண்டியாவிற்கு கேப்டன்சி வழங்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு மும்பை அணியில் விளையாடி வரும் சக நட்சத்திர வீரர்களான சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் கூட மறைமுகமாக பாண்டியாவின் கேப்டன்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இவ்வேளையில் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே ஹார்திக் பாண்டியா குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் ரசிகர்கள் தற்போது ஒருபடி மேலே சென்று வரம்பு மீறி சில பதிவுகளை இணையத்தில் ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே “RIP ஹார்டிக் பாண்டியா” என்கிற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படி ரோகித் சர்மாவின் மீதுள்ள அன்பு காரணமாக ஹார்டிக் பாண்டியா இறக்கும் அளவிற்கு ஒரு ஹேஷ் டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க : அப்படின்னா அவ்ளோ தானா? சூரியகுமார் யாதவின் இன்ஸ்டாகிராம் பதிவால் மும்பை ரசிகர்கள் சோகம்

ஏற்கனவே நடைபெற்று முடிந்த செய்தியாளர் சந்திப்பில் ஹார்திக் பாண்டியா ரோஹித் சர்மா குறித்து பாராட்டி பேசி இருந்தாலும் அவரை ஏன் கேப்டன் பதிவிலிருந்து நீக்கினார்கள்? என்பது போன்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். இன்னும் ஐபிஎல் துவங்க சில நாட்களே இருக்கும் வேளையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் பாண்டியாவை இன்றளவும் கேப்டனாக ஏற்றுக் கொள்ள மறுத்து ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement