அப்படின்னா அவ்ளோ தானா? சூரியகுமார் யாதவின் இன்ஸ்டாகிராம் பதிவால் மும்பை ரசிகர்கள் சோகம்

Suryakumar Yadav 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கப் போகும் ஐபிஎல் 2024 டி20 தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்க உள்ளது. இம்முறை 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்க உள்ளது. அதற்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்து இந்தியாவின் கேப்டனாக திகழும் ரோகித் சர்மாவை அந்த அணி கழற்றி விட்டதை ரசிகர்கள் பின்னடைவாகவே பார்க்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் சூரியகுமார் யாதவ் விளையாடுவாரா என்ற கேள்வியை இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 தொடரரின் 3வது போட்டியில் கேப்டனாக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவர் ஃபீல்டிங் செய்யும் போது கணுக்காலில் மோசமான காயத்தை சந்தித்தார்.

- Advertisement -

ரசிகர்கள் கவலை:
அதற்காக லண்டனுக்கு சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் ஐபிஎல் தொடருக்கு 3 மாதங்கள் இருந்தால் முழுமையாக குணமடைந்து விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பினார். இருப்பினும் இன்னும் குணமடையாத காரணத்தால் மும்பை விளையாடும் முதல் 2 போட்டிகளில் சூரியகுமார் விளையாட மாட்டார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

சொல்லப்போனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக “ஸ்போர்ட்ஸ் ஹெரினா” என்னும் சிகிச்சை கொண்ட தாம் வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்த சூரியகுமார் விரைவில் ஐபிஎல் தொடரில் விளையாட வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கருப்பு நிற புகைப்படத்தில் உடைந்த இதயம்” எமோஜியை சூரியகுமார் யாதவ் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

அதை பார்க்கும் மும்பை ரசிகர்கள் ஒருவேளை இன்னும் காயம் முழுமையாக குணமடையாததால் ஐபிஎல் 2024 தொடரில் விளையாட முடியாது என்பதை நினைத்து தான் சூரியகுமார் இப்படி பதிவிட்டுள்ளாரோ என்று கவலை தெரிவிக்கின்றனர். அத்துடன் ஏற்கனவே ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த பதிவு குறைந்தபட்சம் 2024 ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் சூர்யகுமார் விளையாட மாட்டார் என்பதை கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பிய ஹசரங்கா.. சன் ரைசர்ஸ் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு – விவரம் இதோ

என்ன தான் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாற்றமாக செயல்பட்டு 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்திக்க ஒரு காரணமாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் அவர் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். எனவே மும்பை பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் இப்படி காயத்தால் விளையாடாமல் போனால் அது ஹர்திக் பாண்டியா தலைமையிலான அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Advertisement