டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பிய ஹசரங்கா.. சன் ரைசர்ஸ் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு – விவரம் இதோ

Hasaranga
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இந்த சுற்றுப்பயத்தில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்து கொண்டது.

- Advertisement -

அதற்கு அடுத்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மார்ச் 22-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த வனிந்து ஹசரங்கா மீண்டும் இணைந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்த அவர் இலங்கை அணிக்கு தான் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விரும்புவதாக தெரிவித்து அணியில் இணைந்துள்ளார். இதன் காரணமாக அவர் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் மூன்று போட்டிகளை தவறவிட இருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அவர் தற்போது மீண்டும் இலங்கை டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு வலு சேர்த்துள்ளது.

இதையும் படிங்க : வயசானா என்ன.. தோனி பெஞ்சமின் பட்டன் மாதிரி.. அதுக்குன்னு பிளான் வெச்சுருக்காரு.. மைக் ஹசி பேட்டி

அதேவேளையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் மினி ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் முடியும்வரை அவரால் ஐ.பி.எல் தொடருக்கு திரும்ப முடியாது என்பதனால் ஐ.பி.எல் தொடரின் முதல் மூன்று போட்டிகளை தவறவிடும் அவர் அணியில் இணையவும் தாமதம் ஏற்படும் என்பதனால் சன்ரைசர்ஸ் அணிக்கு அது பின்னடைவாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement