வயசானா என்ன.. தோனி பெஞ்சமின் பட்டன் மாதிரி.. அதுக்குன்னு பிளான் வெச்சுருக்காரு.. மைக் ஹசி பேட்டி

Mike Hussey 2
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் துவங்கும் இந்த வருட ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்க வைப்பதற்கான பயணத்தை சிஎஸ்கே வெற்றியுடன் துவக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

அதே போல 41 வயதை கடந்து விட்ட எம்எஸ் தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அதில் கடந்த வருடம் முழங்காலில் சந்தித்த காயத்தால் அவதிப்பட்ட அவர் அதையும் தாண்டி சிறப்பாக கேப்டன்ஷிப் செய்து சென்னை ஐந்தாவது கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

பெஞ்சமின் பட்டன் தோனி:
இருப்பினும் முழங்கால் வலியால் முன்கூட்டியே பேட்டிங் செய்வதற்கு வராத அவர் பெரும்பாலும் கடைசி ஓவரில் வந்து ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டார். இந்நிலையில் விரைவில் 42 வயதை தொடும் எம்.எஸ். தோனியால் வேகமாக ஓட முடியாது என்பதை தாங்கள் அறிவோம் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி தெரிவித்துள்ளார்.

ஆனால் பெஞ்சமின் பட்டன் எனும் பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல வயது அதிகரிக்க அதிகரிக்க தோனி முன்னேற்றத்தை சந்தித்து வருவதாகவும் ஹசி கூறியுள்ளார். எனவே சிங்கிள், டபுள் ரன்களை ஓடி எடுப்பது கடினம் என்பதால் கடைசி நேரத்தில் களமிறங்கி கணிசமான பந்துகளை எதிர்கொண்டு ஃபினிஷிங் செய்வதற்கான பயிற்சிகளை தோனி எடுத்து வருவதாக ஹசி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அது தான் இம்முறையும் பேட்டிங்கில் அசத்துவதற்கு தோனி வைத்துள்ள திட்டம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அவர் நன்றாக தயாராகி வருகிறார். தற்சமயத்தில் அவருடைய முழங்கால் நன்றாக இருப்பதாக தெரிகிறது. தற்போது வலைப்பயிற்சியில் அவர் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். அவர் பெஞ்சமின் பட்டன் போல தொடர்ந்து முன்னேறி வருபவர் என்பதை நான் கண்டிப்பாக ஒப்புக்கொள்வேன்”

இதையும் படிங்க: 32 வருடம் கழித்து.. நடைபெறும் இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானம் வெளியீடு.. பெர்த்தில் பிளான் போடும் ஆஸி

“இப்போதும் அவர் இளமையாக இல்லை. எனவே வேகமாக ரன்கள் எடுக்க ஓடுவது மிகவும் கடினமாகும். ஆனால் இன்னிங்ஸின் கடைசி நேரத்தில் அதிகமாக ஓட வேண்டிய அவசியம் இல்லை. எனவே அப்போது வந்து அவரால் தெளிவாகப் பந்தை அடிக்க முடியும். அதற்கான பயிற்சிகளை தற்போது அவர் சிறப்பாக எடுத்து வருவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement