32 வருடம் கழித்து.. நடைபெறும் இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானம் வெளியீடு.. பெர்த்தில் பிளான் போடும் ஆஸி

IND vs AUS 2
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரை 4 – 1 (5) என்ற கணக்கில் வென்ற இந்தியா ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அதைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் கடைசி தொடராக நடைபெறும் அந்த தொடருக்காக ரசிகர்கள் இப்போதிலிருந்தே ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். ஏனெனில் 2018/19இல் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்தது.

- Advertisement -

மைதானங்கள் வெளியீடு:
அதை விட 2020/21இல் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்த இந்தியா அதன் பின் ரகானே தலைமையில் கொதித்தெழுந்து 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வென்று மாபெரும் வரலாறு படைத்தது. அந்த வரிசையில் இம்முறை 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

இதற்கு முன் கடைசியாக 1991/92 சீசனில் தான் ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியிருந்தது. இந்நிலையில் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான மைதானங்கள் பற்றிய அறிவிப்பு சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதன் படி முதல் போட்டி பெர்த் நகரில் இருக்கும் ஆப்டஸ் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2018இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானத்தில் இதுவரை ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்ததே இல்லை. எனவே 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் 2 தோல்விகளை கொடுத்த இந்தியாவை இம்முறை ஆரம்பத்திலேயே அடக்குவதற்காக அந்த மைதானத்தில் முதல் போட்டியை நடத்த ஆஸ்திரேலிய வாரியம் திட்டமிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 2020/21இல் இந்தியா மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியாவுக்கு ராசியான காபா மைதானத்தில் 3வது போட்டி நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: பைனல் மேட்ச் அப்போ இப்படியா பண்ணுவீங்க? ரசிகர்களின் கேலிக்கு ஆளான பாகிஸ்தான் வீரர் – என்ன நடந்தது?

பின்னர் 36க்கு ஆல் அவுட்டாகி இந்தியா மோசமான சாதனை படைத்த அடிலெய்ட் மைதானத்தில் 3வது போட்டி பகலிரவாக நடைபெறும் என்று தெரிய வருகிறது. அதைத்தொடர்ந்து கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளில் புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் 4வது போட்டி பாக்ஸிங் டே போட்டியாக நடைபெற உள்ளது. இறுதியாக 2025 புத்தாண்டு துவங்கிய முதல் வாரத்தில் சிட்னி நகரில் 5வது போட்டி நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது.

Advertisement