பைனல் மேட்ச் அப்போ இப்படியா பண்ணுவீங்க? ரசிகர்களின் கேலிக்கு ஆளான பாகிஸ்தான் வீரர் – என்ன நடந்தது?

Imad
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருவது போன்று பாகிஸ்தான் நாட்டில் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான பி.எஸ்.எல் கிரிக்கெட் தொடரானது நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. அந்த வகையில் மார்ச் 18-ஆம் தேதி நேற்று கராச்சி நகரில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணியும், இஸ்லாமாபாத் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முல்தான் சுல்தான்ஸ் அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இஸ்லாமாபாத் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவிக்க இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றதோடு மட்டுமின்றி பி.எஸ்.எல் கோப்பையையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இஸ்லாமாபாத் அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இமாத் வாசிம் நான்கு ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றினார். அதேபோன்று பேட்டிங்கிலும் 19 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராக பார்க்கப்படும் இவரது விரும்பத் தகாத செயல் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் முல்தான் சுல்தான்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது முக்கியமான நேரத்தில் ஓய்வறைக்கு திரும்பிய இமாத் வாசிம் அங்கிருந்தபடி சிகரெட்டை புகைத்த படி போட்டியை சில ஓவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க : மகளிர் ஐபிஎல் தொடரையாவது நெருங்க முடிந்ததா? பிஎஸ்எல் தொடரின் பரிசு தொகை கம்பேரிசன் இதோ

இப்படி பி.எஸ்.எல் தொடரின் இறுதிப்போட்டியின் போது முக்கியமான நேரத்தில் ஓய்வறைக்கு சென்று புகைபிடித்த இவரது செயலை பல்வேறு ரசிகர்களும் கேலி செய்து தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement