மகளிர் ஐபிஎல் தொடரையாவது நெருங்க முடிந்ததா? பிஎஸ்எல் தொடரின் பரிசு தொகை கம்பேரிசன் இதோ

PSL vs WPL 24
- Advertisement -

இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை வென்றது. ஸ்மிருதி மந்தனா தலைமையில் கடந்த வருடம் லீக் சற்றுடன் வெளியேறினாலும் இந்த வருடம் சிறப்பாக விளையாடிய அந்த அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. அதனால் ஆர்சிபி ரசிகர்கள் தற்போது அதை கொண்டாடி வருகின்றனர்.

அந்த தொடர் நிறைவு பெற்ற அடுத்த நாளான நேற்று பாகிஸ்தானில் நடைபெற்று வந்த பிஎஸ்எல் 2024 டி20 தொடரும் முடிவுக்கு வந்தது. அதில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான் அணியை சடாப் கான் தலைமையிலான இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்கடித்தது. அதனால் 3வது முறையாக பிஎஸ்எல் கோப்பையை அந்த அணி வென்றது இஸ்லாமாபாத் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

பரிசுத் தொகை:
முன்னதாக ஐபிஎல் தொடருக்கு போட்டியாக கடந்த 2016 முதல் பாகிஸ்தான் வாரியம் பிஎஸ்எல் டி20 தொடரை நடத்தி வருகிறது. ஆனால் அப்போதிலிருந்தே இந்தியா நடத்தும் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தான் உலகிலேயே மிகச் சிறந்த டி20 தொடர் என்று பாகிஸ்தானை சேர்ந்த பல நட்சத்திர முன்னாள் இந்நாள் வீரர்கள் பேசி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

ஆனால் பாகிஸ்தானின் நட்சத்திர வீரரான பாபர் அசாமுக்கு பிஎஸ்எல் தொடரில் கொடுக்கப்படும் சம்பளம் இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலியின் ஐபிஎல் சம்பளத்திற்கு ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்திலேயே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பிஎஸ்எல் 2024 தொடரில் வெற்றி பெற்ற இஸ்லாமாபாத் யுனைட்டட் அணிக்கு கோப்பையுடன் பாகிஸ்தான் ரூபாயில் 14 கோடிகள் பரிசாக கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இது இந்திய ரூபாயில் சராசரியாக 4.13 கோடிகளாகும். ஆனால் மகளிர் ஐபிஎல் 2024 தொடரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு கோப்பையுடன் 6 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. அதே போல தோல்வியை சந்தித்த முல்தான் அணிக்கு பிஎஸ்எல் தொடரில் பாகிஸ்தான் ரூபாயில் 5.6 கோடி அதாவது இந்திய ரூபாயில் 1.65 கோடி பரிசாக கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: அப்படியே போய்டுவேன்னு நினைச்சீங்களா.. முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியிட்ட சிஎஸ்கே அப்டேட்.. ஆனால் சின்ன சிக்கல்

மறுபுறம் 2024 மகளிர் ஐபிஎல் தொடரில் தோல்வியை சந்தித்த டெல்லிக்கு 3 கோடி ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. இது போக 2023 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு 20 கோடியும் தோல்வியை சந்தித்த குஜராத்துக்கு 13 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் ஆடவர் மட்டுமல்ல மகளிர் ஐபிஎல் தொடரை கூட பாகிஸ்தான் வாரியம் நடத்தும் பிஎஸ்எல் தொடரின் பரிசுத்தொகை நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement