அப்படியே போய்டுவேன்னு நினைச்சீங்களா.. முஸ்தபிசுர் ரஹ்மான் வெளியிட்ட சிஎஸ்கே அப்டேட்.. ஆனால் சின்ன சிக்கல்

Mustafizur Rahman
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்குகிறது. இந்த வருடம் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் டேவோன் கான்வே மற்றும் பதிரனா ஆகிய 2 முக்கிய காயத்தை சந்தித்துள்ளது ஆரம்பத்திலேயே சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

அதில் கடந்த வருடம் 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து சென்னை ஐந்தாவது கோப்பையை வெல்ல உதவிய டேவோன் கான்வே இம்முறை 70% மேற்பட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று நம்பப்படுகிறது. அதே போல குட்டி மலிங்கா என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு கடந்த வருடம் அசத்திய பதிரனாவும் சமீபத்தில் சந்தித்த காயத்தால் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிய வருகிறது.

- Advertisement -

தயாரான ரஹ்மான்:
அந்த சூழ்நிலையில் மார்ச் 18ஆம் தேதி நடைபெற்ற இலங்கை எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் காயத்தை சந்தித்தார். குறிப்பாக 9 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் எடுத்த அவர் 10வது ஓவரில் காயத்தை சந்தித்து எழுந்து நடக்க முடியாமல் தடுமாறினார்.

அதன் காரணமாக அவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து வங்கதேச அணியினர் மைதானத்திற்கு வெளியே அழைத்து சென்றது சிஎஸ்கே ரசிகர்களை கலக்கமடைய வைத்தது. அதனால் கான்வே, பதிரனாவை தொடர்ந்து அவரும் காயத்தால் சிஎஸ்கே அணிக்கு விளையாட மாட்டார் என்று ரசிகர்கள் கவலையடைந்தனர். இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவதற்கு புறப்படுவதாக முஸ்தபிசுர் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “புதிய பணிக்காக உற்சாகமாகவும் ஆவலுடனும் காத்திருக்கிறேன். ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்காக சென்னைக்கு செல்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னை காத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வழங்க முடியும்” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு சென்னை ரசிகர்களிடம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எப்படி இருந்த மனுஷன்.. இப்போ எப்படி மும்பை அணியுடன் ஜாயிண்ட் பண்ணியிருக்காரு பாருங்க – ரோஹித் வெளிப்படுத்திய அதிருப்தி

இருப்பினும் தற்சமயத்தில் லேசான காயத்தை சந்தித்துள்ள தாம் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்மாறு அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே அவர் சிஎஸ்கே அணிக்காக ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்று நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய முதல் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement