எப்படி இருந்த மனுஷன்.. இப்போ எப்படி மும்பை அணியுடன் ஜாயிண்ட் பண்ணியிருக்காரு பாருங்க – ரோஹித் வெளிப்படுத்திய அதிருப்தி

Rohit
- Advertisement -

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளும் தங்களது அணிகளுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு விலைக்கு வாங்கி தங்களது அணிகளை பலப்படுத்தினர். அந்த வகையில் 10 அணிகளுக்கு இடையே குறிப்பிட்ட பல மாற்றங்கள் நடைபெற்று இருந்தன. மேலும் இந்த ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பாக டிரேடிங் முறையிலும் சில முக்கிய மாற்றங்கள் நடைபெற்றிருந்தன.

அதிலும் குறிப்பாக கடந்த 2022-23 ஆகிய சீசன்களில் குஜராத் அணியை தலைமை தாங்கி வழி நடத்திய ஹார்டிக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய தொகை கொடுத்து குஜராத் அணியிடம் இருந்து தங்களது அணிக்கு டிரேடிங் முறையில் கொண்டு வந்தது. அதோடு மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய அவரை கேப்டனாகவும் அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் அதிரடி காட்டியது.

- Advertisement -

இதன் காரணமாக ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு சாதாரண வீரராக விளையாட இருக்கிறார் என்றும் அறிவித்திருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் பலரும் மும்பை இந்தியன்ஸ் அணியை சமூக வலைதளத்தில் பின் தொடர்வதை நிறுத்தினர். மேலும் ஐந்து முறை கோப்பையை வென்ற சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை கேப்டன் பதிவிலிருந்து நீக்கியது தவறு என்றும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து முன்வைத்தனர்.

மேலும் ரோகித் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது ஜஸ்ப்ரீத் பும்ரா, சூரியகுமார் யாதவ் போன்ற மும்பை அணியின் முன்னணி வீரர்கள் கூட மறைமுகமாக தங்களது எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தற்போது ரோகித் சர்மா தாமதமாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

- Advertisement -

மேலும் மும்பை அணியில் தற்போது தாமதமாக இணைந்துள்ள ரோஹித் சர்மா மறைமுகமாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சில விடயங்களை செய்துள்ளதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அந்த வகையில் எப்பொழுதுமே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையும் போது தனது மகள், மனைவி என குடும்பத்துடன் சிரித்த முகத்துடன் இணையும் ரோகித் சர்மா இம்முறை குடும்பத்தாரை வீட்டில் விட்டுவிட்டு தனியாகவே மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து இருக்கிறார்.

இதையும் படிங்க : அந்த வேலையில் பேசிய சாதிப்பதில் கில்லாடி.. ஆனா பழைய ரிஷப் பண்ட்டை பாக்க முடியாது.. கவாஸ்கர் கருத்து

அதுமட்டும் இன்றி பொதுவாகவே பயிற்சி முகாம்களில் சிரித்த முகத்துடன் இணையும் ரோஹித் மைதானத்திற்கு செல்லாமல் சாதாரணமாக அணி வீரர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார். மேலும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்காமல், புகைப்படத்திற்கு போஸ் கொடுக்காமல் இப்படி எவ்வித வரவேற்பும் இன்றி சைலண்டாக ரோஹித் சர்மா சென்றதே மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் மீதுள்ள அதிருப்தியினால் தான் என்றும் ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement