அந்த வேலையில் பேசிய சாதிப்பதில் கில்லாடி.. ஆனா பழைய ரிஷப் பண்ட்டை பாக்க முடியாது.. கவாஸ்கர் கருத்து

Sunil Gavaskar Pant
- Advertisement -

ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரில் தங்களுடைய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ள டெல்லி அணிக்கு ரிசப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவது பலமாக பார்க்கப்படுகிறது. 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.

அதனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல், ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் விளையாடாத அவர் ஒரு வருடத்திற்கு பின் குணமடைந்து தற்போது களமிறங்க உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் காயத்திலிருந்து குணமடைந்து நேரடியாக களமிறங்குவதால் அவர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவாரா அல்லது கடினமான விக்கெட் கீப்பிங் வேலை செய்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

- Advertisement -

கவாஸ்கர் கருத்து:
இந்நிலையில் முழங்காலில் மோசமான காயத்தை சந்தித்த ரிசப் பண்ட் அடிக்கடி அமர்ந்து எழுந்திருக்க வேண்டிய விக்கெட் கீப்பிங் வேலையை செய்வது கடினம் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அதனாலேயே இப்போதைக்கு பேட்டிங்கிலும் அதிரடியாக விளையாடக்கூடிய பழைய ரிஷப் பண்ட்டை பார்க்க முடியாது என்றும் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அதை விட ஜாலியாக ஸ்லெட்ஜிங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை எடுப்பதற்கு உதவக்கூடிய ரிஷப் பண்ட் போல உலகின் மற்ற விக்கெட் கீப்பர்களால் செயல்பட முடியாது என்றும் பாராட்டும் கவாஸ்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முழங்காலில் காயத்தை சந்திக்கும் போது விக்கெட் கீப்பிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். சொல்லப்போனால் பேட்டிங் செய்வதற்கும் கூட முழங்கால் என்பது முக்கியமாகும்”

- Advertisement -

“எனவே ஆரம்பகட்டத்தில் நாம் இதற்கு முன் பார்த்த உண்மையான ரிசப் பண்ட்டை பார்க்க முடியாது. ஸ்டம்ப்புகளுக்கு பின்னால் நின்று ஜாலியாக பேசி பொழுதுபோக்கு செய்யும் அவரைப் போன்ற விக்கெட் கீப்பரை கண்டறிவது கடினமாகும். ஏனெனில் பேட்ஸ்மேன்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக பல்வேறு விஷயங்களை சொல்லக்கூடிய விக்கெட் கீப்பர்கள் இங்கே அதிகமாக உள்ளனர். ஆனால் தாம் யாரை நினைக்கிறாரோ அந்த பேட்ஸ்மேனை குறிவைத்து ஜாலியாக பேசும் திறமை ரிசப் பண்ட்டிடம் மட்டுமே உள்ளது”

இதையும் படிங்க: ஜனவரி மாசமே காயம் குணமாகிடுச்சு.. ஆனாலும் ஏன் இந்தியாவுக்கு விளையாடல தெரியுமா? பாண்டியா ஓப்பன்டாக்

“அவருடைய பேச்சுக்களைக் கேட்டு எதிரணி பேட்ஸ்மேன்களும் சிரிப்பார்கள். ஆனால் அவருடைய பேச்சுக்களை அப்படி கேட்டு மகிழும் போது பேட்ஸ்மேன்களின் கவனம் சீர்குலைந்து விடும் அல்லவா? அது ரிசப் பண்ட் விளையாடும் அணிக்கு பெரிய சாதகமாக அமையும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2018/19 பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் ஃபைனை சிரித்துக்கொண்டே ரிஷப் பண்ட் ஸ்லெட்ஜிங் செய்தது இந்தியாவின் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement