ஜனவரி மாசமே காயம் குணமாகிடுச்சு.. ஆனாலும் ஏன் இந்தியாவுக்கு விளையாடல தெரியுமா? பாண்டியா ஓப்பன்டாக்

Hardik Pandya 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக களமிறங்க உள்ளார். 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தும் ரோகித் சர்மாவை கழற்றி விட்டுள்ள மும்பை அணி நிர்வாகம் குஜராத் அணியிலிருந்த பாண்டியாவை வலுக்கட்டாயமாக வாங்கி கேப்டன்ஷிப் பதவியை கொடுத்துள்ளது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதை விட 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா குணமடைந்ததும் இந்தியாவுக்காகவும் விளையாடாமல் உள்ளூர் கிரிக்கெட்டிலும் களமிறங்காமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். அதனால் நாட்டுக்காக ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் பணத்துக்காக மட்டும் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டி கூட தவறாமல் விளையாடுவார் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

ஜனவரி மாதமே:
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதமே காயத்திலிருந்து ஓரளவு குணமடைந்து விட்டதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இருப்பினும் அப்போது ஆப்கானிஸ்தான் டி20 தொடர் முடிந்து விட்டதால் மேற்கொண்டு இந்தியாவுக்காக விளையாடவில்லை என்று பாண்டியா தெரிவித்துள்ளார். அத்துடன் 50% ஃபிட்னஸ் மட்டுமே வைத்துக்கொண்டு 2023 உலகக் கோப்பையில் விளையாட வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கும் பாண்டியா இது பற்றி பேசியது பின்வருமாறு.

“ஆம் ஐபிஎல் தொடரில் நான் பந்து வீசுவேன். உலகக் கோப்பையில் நான் சந்தித்தது வினோதமான காயம். என்னுடைய கடந்த கால காயங்களுக்கும் உடல் தகுதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் ஃபிட்டான போது ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தான் டி20 தொடர் தொடங்கியது. அப்போதிருந்து நான் நன்றாக இருக்கிறேன். ஆனால் இந்தியாவுக்காக விளையாட எந்த போட்டியும் இல்லை”

- Advertisement -

“மேலும் காயத்தை சந்தித்த போது அது எந்தளவு மோசம் என்பதற்கான குழு எனக்கு தெரியவில்லை. காயத்தை சோதிக்க சென்ற போது முதலில் அது லேசானது போல் தெரிந்தது. ஆனால் 2 மணி நேரம் கடந்த பின் கணுக்கால் வீங்கியது தெரிந்தது. அதைத் தொடர்ந்து என்சிஏவுக்கு சென்ற நான் உலகக் கோப்பையில் மீண்டும் விளையாடுவதற்கு ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தேன். அப்போது 12வது நாளில் எனக்கு மீண்டும் விளையாடுவதற்கான அழைப்பு வந்தது”

இதையும் படிங்க: சி.எஸ்.கே மேட்ச் சேப்பாக்கத்துல நடக்கும்போது டிக்கெட் டிமேண்டாக இதுதான் காரணம் – காசி விசுவநாதன் விளக்கம்

“ஆனால் அப்போது 50% ஃபிட்னஸ் மட்டுமே வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு விளையாட விரும்புகிறீர்களா என்ற கேள்வி எழுந்தது. அதற்கான என்னுடைய பதில், இல்லை. இந்தியா என்னை விட சிறந்த வீரருக்கு தகுதியான அணி. முழுமையாக குணமடையாமல் திரும்பி வந்து விளையாடுவது என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. அங்கிருந்து தான் காயத்திலிருந்து குணமடையும் பயணம் துவங்கியது. உங்கள் உடல் இயற்கையாக குணமடைவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும்” என்று கூறினார்.

Advertisement