சி.எஸ்.கே மேட்ச் சேப்பாக்கத்துல நடக்கும்போது டிக்கெட் டிமேண்டாக இதுதான் காரணம் – காசி விசுவநாதன் விளக்கம்

Kasi
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முதல் போட்டி மார்ச் 22-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூபிளெஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

இந்த முதல் போட்டியே இரு பெரும் அணிகளுக்கிடையே நடைபெற இருப்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று மார்ச் 18-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

- Advertisement -

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதியம் 12 மணிக்கு துவங்கிய விற்பனை 10 நிமிடங்களிலேயே முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 38000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய இந்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 18,000 டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைன் மூலமாக விற்கப்பட்டதால் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் சிஎஸ்கே நிர்வாகமும், பிசிசிஐ-யும் சேர்ந்துதான் டிக்கெட் விற்பனையில் கோளாறு செய்கின்றனர் என ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இந்த டிக்கெட் விற்பனை குறித்து ஏற்கனவே விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ள காசி விஸ்வநாதன் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் அவர் கூறியதாவது : சேப்பாக்கம் மைதானத்தில் 38 ஆயிரம் இருக்கைகள் மட்டுமே உள்ளது என்பதனால் அதில் 20% டிக்கெட்டுகளை பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தர வேண்டும். அதன் காரணமாக 8000 டிக்கெட் அவர்களுக்கு சென்று விடும். அதேபோன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக ஒவ்வொரு கிளப் கிரிக்கெட் அணிக்கும் 20 டிக்கெட்டுகள் என 500 டிக்கெட்டுகள் அவர்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும்.

இதையும் படிங்க : துருவ் ஜுரேல், சர்ப்ராஸ் கானுக்கு பிசிசிஐ கொடுத்த மிகப் பெரிய அங்கீகாரம்.. ரசிகர்கள் வரவேற்பு

அவர்களை தவிர்த்து அரசு அதிகாரிகள், ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள், பங்குதாரர்கள் என அவர்களுக்கும் தனியாக டிக்கெட் விலை ஒதுக்க வேண்டி இருக்கும். இவற்றையெல்லாம் தாண்டி தான் ரசிகர்களுக்கு டிக்கெட்டை ஒதுக்கப்படுகிறது இதன் காரணமாகவே டிக்கெட் விற்பனைகளில் அசவுகரியம் ஏற்படுகிறது. இதை யாரும் புரிந்து கொள்ளாமல் குற்றம் சாட்டுகின்றனர் என காசி விஸ்வநாதன் தெளிவான பதிலை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement