- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரே ஓவர்ல 25 ரன்ஸ் அடிக்க போறீங்களா? பாக்கெட்ல வெச்சா என்ன? கில், ஜெய்ஸ்வாலை சாடிய கவாஸ்கர்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா திணறி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் ரோகித் தலைமையில் இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுமோசமான தோல்வியை சந்தித்தது.

அடுத்ததாக காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது போட்டியிலும் முதலில் பந்து வீசிய இந்தியாவை நொறுக்கிய ஆஸ்திரேலியா 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக எடுத்த நிலையில் டிராவிஸ் ஹெட் 152, ஸ்டீவ் ஸ்மித் 101 இந்தியாவுக்கு அதிகபட்சமாக விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் களமிறங்கிய இந்தியா மூன்றாவது நாள் முடிவில் 51-4 என சரிந்து தோல்வியை தவிர்க்க போராடுகிறது.

- Advertisement -

சாடிய கவாஸ்கர்:

ஜெய்ஸ்வால் 4, சுப்மன் கில் 1, கோலி 3, ரிஷப் பண்ட் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். களத்தில் ராகுல் 33*, ரோஹித் 0* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில் இந்தப் போட்டியில் பொறுப்பின்றி சுமாரான ஷாட்டை அடித்த இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், கில் ஆகியோரை முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் சாடியுள்ளார். முதலில் ஜெய்ஸ்வால் ஆட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“இது சிறந்த ஷாட் கிடையாது. 445 ரன்களை துரத்தும் போது உங்களுடைய கண்ணை அதில் வைத்துக் கொள்வது முக்கியம். ஸ்டார்க் வீசியது ஃஹால்ப் வாலி பந்து கூட கிடையாது. அதை நீங்கள் பிளிக் செய்து எளிதான கேட்ச் கொடுத்தீர்கள். மறுபுறம் அது பட் கமின்ஸ் சரியான இடத்தில் வீரரை நிறுத்தி கேப்டன்ஷிப் செய்தார். 445 ரன்களை துரத்தும் போது துவக்க வீரரான உங்களிடம் இது போன்ற ஆட்டத்தை எதிர்பார்க்க மாட்டோம்”

- Advertisement -

பாக்கெட்டில் வைங்க:

“நேர்மறையாக இருப்பது பரவாயில்ல. ஆனால் புதிய பந்தில் நீங்கள் நிதர்சனத்தை உணர்ந்து விளையாட வேண்டும். முதல் ஓவரிலேயே நீங்கள் ஒன்றும் 25 ரன்கள் அடிக்கப்போவதில்லை. செட்டிலாகும் வரை பிட்ச் எப்படி இருக்கும் என்பதை உங்களால் மதிப்பிட முடியாது. அது போன்ற சூழ்நிலையில் சுப்மன் கில் எதிர்கொண்ட மூன்றாவது பந்திலேயே அடித்த ஷாட் மிகவும் ஆபத்தானது”

இதையும் படிங்க: அவர் என்ன குழந்தையா? ப்ரித்வி ஷா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

“அந்த கேட்ச்சை மார்ஷ் அபாரமாக பிடித்ததால் கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் பந்தை நீங்கள் எளிதாக அடிக்காமல் கீப்பரிடம் விட்டிருக்கலாம். இது போன்ற ஷாட்டுகளை உங்களுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். 30, 40, 50 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை பெற்ற பின் அது போன்றவற்றை நீங்கள் வெளியே எடுத்து விளையாடலாம்” என்று கூறினார்.

- Advertisement -