அவர் என்ன குழந்தையா? ப்ரித்வி ஷா குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம் இதோ

Shreyas Iyer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சச்சினாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ப்ரிதிவி ஷா தற்போது மோசமான நிலையை சந்தித்துள்ளார். ஏனெனில் மிக இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்த அவர் காயம் காரணமாக இந்திய அணியை விட்டு விலகிய நிலையில் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஊக்க மருந்து பிரச்சினை, அதிக உடல் எடை, மோசமான நடவடிக்கைகள் என ஒழுக்கமின்மை காரணமாக தற்போது மிகப்பெரிய சறுக்களை சந்தித்துள்ளார்.

அவர் ஒன்னும் குழைந்த கிடையாது :

அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை அடிப்படை விலையான 75 லட்ச ரூபாய் கொடுத்து கூட யாரும் வாங்கவில்லை. அந்த அளவிற்கு அவரது நிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ளது.

- Advertisement -

நடைபெற்று முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடருக்கான மும்பை அணியில் இடம் பிடித்த அவர் இந்த தொடரிலாவது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரிலும் அவர் ஒன்பது போட்டிகளில் வெறும் 197 ரன்களை மட்டுமே அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

சையத் முஷ்டாக் அலி தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சக அணி வீரரான ப்ரித்வி ஷா குறித்து பேசுகையில் கூறியதாவது : ப்ரித்வி ஷா கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட வீரர் என்று நினைக்கிறேன். மற்ற எந்த வீரரிடமும் இல்லாத அளவிற்கு திறமை அவரிடம் இருக்கிறது. ஆனால் அதனை முன்னேற்ற அவசியம் முயற்சி தேவை.

- Advertisement -

கிரிக்கெட் விளையாடும் போது சில நெறிமுறைகளை பின்பற்றிதான் ஆக வேண்டும். நம்மை நாம் கட்டுக்கோப்புடன் பார்த்துக் கொண்டால் மட்டுமே நம்மால் முன்னேற முடியும். ப்ரிதிவி ஷா ஒன்னும் குழந்தை கிடையாது. யாரும் அவர் அருகில் அமர்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது. விளையாட்டு வீரராக நம்முடைய ஒழுக்கத்தை பின்பற்றி மற்றவர்களின் ஆலோசனையை கேட்கும் போது தான் நம்முடைய இன்னல்களை கடந்து சாதிக்க முடியும்.

இதையும் படிங்க : எங்களது அணிக்குள் அந்த பாகுபாடு எல்லாம் கிடையாது.. எல்லாருமே ஒன்னு தான் – பும்ரா பெருந்தன்மை

தற்போது கம்பேக் கொடுக்க நினைக்கும் ப்ரித்வி ஷா கடந்த காலங்களில் ஏற்பட்ட பல தவறுகளை திருத்தும் பணியில் இறங்கியுள்ளார். நிச்சயம் கிரிக்கெட்டில் மட்டும் அவர் கவனம் செலுத்தினால் மீண்டும் முன்னேறி வரமுடியும் என ஷ்ரேயாஸ் ஐயர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement