எங்களது அணிக்குள் அந்த பாகுபாடு எல்லாம் கிடையாது.. எல்லாருமே ஒன்னு தான் – பும்ரா பெருந்தன்மை

Bumrah
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றனர்.

எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை :

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் போது முதல் போட்டியின் போது இந்திய அணி வெற்றி பெற முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மிகமுக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனால் அவருக்கு மற்ற பந்துவீச்சாளர்களிடடம் இருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்சில் கூட பும்ரா ஆறு விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஒருபுறம் பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்ற ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை பும்ரா மொத்தமாக 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள வேளையில் மற்ற அனைவரும் சேர்ந்து 20 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளனர்.

இதன் காரணமாக இந்திய அணியி பும்ராவிற்கு சரியான ஒத்துழைப்பு மற்ற பவுலர்களிடம் இருந்து கிடைக்கவில்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறுகையில் : எங்கள் அணியில் உள்ள யார் மீதும் குறை கூறும் பழக்கம் எங்களுக்கு கிடையாது.

- Advertisement -

நீ இதை செய்தாய், நீ இதை செய்தாய் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். பந்துவீச்சு யூனிட்டை பொறுத்தவரை மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாடுவது என்பது கூடுதல் சவாலான ஒன்று. ஒவ்வொரு பவுலரும் ஒவ்வொரு சவாலை சந்தித்துதான் பந்து வீசி வருகிறார்கள்.

இதையும் படிங்க : 6 விக்கெட்ஸ்.. காபாவின் நாயகனாக.. கபில் தேவை முந்தி ஆஸியில் பும்ரா 56 வருட 2 வரலாற்று சாதனை

நான் இளம்வீரர்களுக்கு என்னுடைய அனுபவத்தை பகிர்ந்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற விரும்புகிறேன். ஒவ்வொரு பந்துவீச்சாளருக்கும் ஒவ்வொரு யோசனை இருக்கும் அந்த வகையில் எங்கள் அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்களும் அவர்களது வேலையை சரியாக செய்கிறார்கள். எங்களுக்குள் எந்த ஒரு வேற்றுமையும் கிடையாது என பும்ரா இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement