இதுக்கு மேல நல்ல பிளேயர் வேணும்னா போய் அந்த சேனலை பாருங்க – தேர்வுக்குழு விளாசிய கவாஸ்கர், காரணம் என்ன

Gavaskar
- Advertisement -

வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதற்காக பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் குறைந்தபட்ச 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. அதற்காக ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இளம் வீரர் சர்ப்ராஸ் கான் சேர்க்கப்படாதது கிட்டத்தட்ட அனைவரையுமே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த 3 வருடங்களாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் முரட்டுத்தனமாக செயல்பட்டு வரும் அவர் தொடர்ந்து 800, 900 ரன்களை அசால்டாக அடித்து வருகிறார்.

Sarfaraz-Khan

- Advertisement -

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் உலகிலேயே டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக 80க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவரை புறக்கணித்துள்ள தேர்வுக்குழு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதற்காக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 45க்கும் குறைவான பேட்டிங் சராசரியை கொண்டுள்ள இசான் கிசான் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை சம்பந்தமின்றி தேர்வு செய்துள்ளது. இதனால் வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சி கோப்பைக்கு அவமானம் நிகழ்ந்துள்ளதாகவும் அதை யாருமே கருத்தில் கொண்டு இந்திய டெஸ்ட் அணியை தேர்வு செய்வதில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கவாஸ்கர் விமர்சனம்:
இது போக சற்று உயரம் குறைவாகவும் உடல் பருமனுடனும் இருப்பதே சர்ப்ராஸ் கான் தேர்வுக்கு மற்றொரு காரணம் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. ஏனெனில் இந்திய அணியில் ஏற்கனவே இடம் பிடித்துள்ள வீரர்கள் அடிக்கடி காயமடைவதாலும் சுமாராக செயல்படுவதாலும் அடுத்த வரும் தொடர்களில் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆனால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று நடைமுறையை பிசிசிஐ மீண்டும் கொண்டு வந்துள்ளது. ஆனால் உடல் தகுதியை விட திறமையே முக்கியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் இன்சமாம்-உல்-ஹக், அர்ஜுனா ரணதுங்கா ஆகியோர் உடல் எடையை பொய்யாக்கி அபாரமாக செயல்பட்டு பெரிய ரன்களையும் குவித்து உலக கோப்பையும் வென்றுள்ளனர்.

sarfaraz 2

இந்நிலையில் ரஞ்சி கோப்பையில் அசத்தும் சர்ஃபிராஸ் கானை விட இன்னும் நல்ல வீரரை தேடினால் பேசாமல் ஆடை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறும் தொலைக்காட்சியை பார்க்குமாறு தேர்வுக்குழுவை முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். ஏனெனில் அதில் தான் மிகவும் மெலிந்த உடலை கொண்டவர்கள் இருப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் கடுமையாக விமர்சித்தது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் நீங்கள் உடல் தகுதியுடன் இல்லை என்றால் உங்களால் சதங்களை அடிக்க முடியாது. எனவே ஃபிட்னஸ் என்பது முக்கியமானதாகும். அதனால் யோ-யோ டெஸ்ட் மீண்டும் கொண்டுவரப்படுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது”

- Advertisement -

“அதே சமயம் யோ-யோ டெஸ்ட் வீரர்களை தேர்வு செய்வதற்கான அளவுகோலாக இருக்கக் கூடாது. மாறாக அந்த வீரர் கிரிக்கெட்டுக்கு தகுதியானவர் என்பதை மட்டும் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அந்த நபர் யாராக இருந்தாலும் கிரிக்கெட்டுக்கு ஏற்றவராக இருந்தால் அதுவே உண்மையில் முக்கியம் என்று நினைக்கிறேன். குறிப்பாக சதமடித்து விட்டு பெவிலியன் திரும்பி மீண்டும் களமிறங்கி விளையாடுவது சரியானதல்ல. ஆனால் அதற்காக நீங்கள் மெலிந்த ஆண்களை மட்டுமே தேடுகிறீர்கள் என்றால் பேசாமல் ஒரு ஆடை அலங்கார நிகழ்ச்சிக்கு சென்று அதில் பங்கேற்பவர்களை தேர்ந்தெடுங்கள்”

Gavaskar

“அவரது கையில் பந்தையும் பேட்டையும் கொடுத்து அவர்களை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக உலகில் அனைவரும் வித்தியாசமான உடலமைப்பை கொண்டிருப்பார்கள். அதேபோல் தான் கிரிக்கெட்டில் இருக்கும் வீரர்களும் வடிவங்களிடம் அளவுகளிலும் வித்தியாசமாக இருப்பார்கள். எனவே உடல் எடையையும் அளவையும் பார்க்காமல் அவர்கள் எவ்வளவு ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுக்கிறார்கள் என்பதை அடிப்படையாக பாருங்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வன்மத்தை காட்டுவதில் இன்னும் மாறலையா? யுவராஜ் சிங்கிற்கு தோனி ரசிகர்கள் பதிலடி – நடந்தது என்ன?

அவர் கூறுவது போல உடல் தகுதி கிரிக்கெட்டுக்கு அவசியமானது என்றாலும் அதற்காக அது மட்டுமே அவசியம் என்பது நிச்சயமாக சரியான அணுகு முறையாக இருக்காது. அதனால் உடல் எடையை இரண்டாவதாக வைத்து சிறப்பான செயல்பாடுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து சேட்டன் சர்மா தேர்வுக்குழுவினர் வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

Advertisement