வன்மத்தை காட்டுவதில் இன்னும் மாறலையா? யுவராஜ் சிங்கிற்கு தோனி ரசிகர்கள் பதிலடி – நடந்தது என்ன?

Yuvraj
- Advertisement -

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச அரங்கில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக செயல்பட்டு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். குறிப்பாக 2000 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தொடர் நாயகன் விருது வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் மிடில் ஆர்டரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்தார். அப்படியே 2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்ஸர் 12 பந்துகளில் அரை சதம் ஆகிய உலக சாதனைகளை படைத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 70 ரன்கள் தெறிக்க விட்ட அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அதை விட 2011இல் சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆல் ரவுண்டராக ஜொலித்து தொடர் நாயகன் விருது வென்ற அவர் 28 வருடங்கள் கழித்து தோனி தலைமையில் இந்தியா கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் அந்த தொடரில் புற்று நோயுடன் நாட்டுக்காக விளையாடிய அவர் அதன் பின் அதிலிருந்து குணமடைந்து மீண்டு வந்த போது பழைய பன்னீர் செல்வமாக செயல்பட தடுமாறினார். குறிப்பாக 2014 டி20 உலக கோப்பை பைனலில் மெதுவாக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த அவர் 2015 உலகக்கோப்பையில் கழற்றி விடப்பட்டார்.

- Advertisement -

மீண்டும் வன்மம்:
இருப்பினும் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி 2016 டி20 உலக கோப்பையில் தேர்வாகும் அளவுக்கு கம்பேக் கொடுத்த அவர் கடந்த 2017ஆம் ஆண்டு கட்டாக் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 25/3 என தடுமாறிய போது தோனியுடன் இணைந்து 256 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா 381/6 ரன்கள் குவிக்க முக்கிய பங்கற்றினார். அதில் தோனி 134 (122) ரன்கள் குவித்த நிலையில் 150 (127) ரன்கள் விளாசிய யுவ்ராஜ் சிங் இந்தியாவின் 15 ரன்கள் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

அந்த இன்னிங்ஸ் அடுத்த சில மாதங்களில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பையும் அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது. அப்படிப்பட்ட அந்த பார்ட்னர்சிப்பின் 6வது வருடத்தை வழக்கம் போல ரசிகர்கள் ஜனவரி 19ஆம் தேதியான நேற்று சமூக வலைதளங்களில் கொண்டாடினார்கள். அதை தனது ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங் “நெவர் கிவ் அப்” என்ற தலைப்புடன் பதிவிட்டு தன்னுடைய நினைவை பகிர்ந்திருந்தார்.

- Advertisement -

ஆனால் அதை பார்த்த தோனி ரசிகர்கள் “இன்னும் தோனி மீது வன்மத்தை வெளிப்படுத்தும் உங்களது குணம் மாறவில்லையா” என்று பதிலடி கொடுக்கிறார்கள். ஏனெனில் அன்றைய நாளில் தோனி அவருக்கு கம்பெனி கொடுத்து பெரிய பாரினர்ஷிப் அமைக்காமல் போயிருந்தால் எதிர்ப்புறம் விக்கெட்டுகள் விழுந்து அழுத்தம் உண்டாகி 150 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்திருக்கும்.

ஒருவேளை “இதில் வன்மம் என்னப்பா இருக்கு அவருடைய ரன்களை தானே அவர் கொண்டாடுகிறார்” என்ற எண்ணம் பலருக்கும் தோணலாம். ஆனால் ஒரு புகைப்படத்தை மட்டும் பதிவிட்டிருந்தால் அந்த எண்ணம் சரியாக இருந்திருக்கும். மாறாக ஒன்றுக்கு 4 புகைப்படங்களை பதிவிட்டுள்ள யுவராஜ் சிங் அதில் ஒன்று கூட தோனி இருக்கும் புகைப்படத்தை சேர்க்காதது தான் வன்மத்தை வெளிப்படுத்துவதாக தோனி ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

- Advertisement -

மேலும் அன்றைய நாளில் ஒரு முக்கிய தருணத்தில் அம்பயர் அவுட் கொடுத்த போது எதிர்ப்புறமிருந்து தோனி ரிவ்யூ கேட்டதை மறந்து விட்டீர்களா என்றும் ரசிகர்கள் விளாசுகிறார்கள். சொல்லப்போனால் கடந்த மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடிய யுவராஜ் சிங் தன்னுடைய கேரியரின் முக்கிய தருணங்கள் அடங்கிய ஒரு ரசிகர் உருவாக்கிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அந்த ரசிகருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: வரலாற்றின் மிகசிறந்த ஃபினிஷருக்கு அடையாளமாய் எம்எஸ் தோனி படைத்துள்ள 5 சாதனைகள்

ஆனால் அந்த ரசிகர் உருவாக்கிய ஒரிஜினல் வீடியோவில் தோனியுடன் இருக்கும் புகைப்படம் அடங்கிய 2 நொடிகளை மட்டும் தேடிப் பிடித்து நறுக்கிய யுவராஜ் சிங் மறு பதிவேற்றம் செய்திருந்தார். அதிலிருந்தே தோனி மீது அவருக்கு வன்மம் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. அந்த சமயத்திலும் இதே போல் ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரசிகர்கள் தற்போதும் நீங்கள் இன்னும் மாறவில்லையா என்று பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement