6 மாசத்துல உ.கோ வெச்சுகிட்டு கேப்டன் இப்படி செய்யலாமா? ரோஹித் சர்மாவை விளாசும் கவாஸ்கர் – நடந்தது என்ன

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்ற இந்தியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு நியூசிலாந்தின் உதவியுடன் தகுதி பெற்றது. அதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் போராடி வென்ற இந்தியாவை 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கி தோற்கடித்த ஆஸ்திரேலியா வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பரிசளித்தது.

IND vs AUS

- Advertisement -

அதனால் 2019க்குப்பின் 4 வருடங்களாக 26 தொடர்களில் தொடர்ந்து தோற்காமல் வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வீழ்த்தியுள்ள ஆஸ்திரேலியா ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி உலகின் புதிய நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாகவும் முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. மறுபுறம் முதல் போட்டியில் தட்டு தடுமாறி வென்ற இந்தியா கடைசி 2 போட்டிகளில் உலக கோப்பை நடைபெறும் இந்த வருடத்தில் மோசமான தோல்விகளை சந்தித்து நம்பர் ஒன் இடத்தையும் தாரை வர்த்துள்ளது ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

விளாசும் கவாஸ்கர்:
முன்னதாக மும்பையில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் தனது உறவினர் திருமணத்தில் பங்கேற்பதால் விலகிய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதில் தலைமை தாங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையில் போராடியாவது இந்தியா சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் 6 மாதத்தில் உலகக் கோப்பை நடைபெறும் நிலையில் கேப்டனாக ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காததே எஞ்சிய 2 போட்டிகளில் தோல்வியை சந்திக்க ஒரு காரணம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Rohit Kuldeep Yadav Virat Kohli KL Rahul India

“ரோகித் சர்மா அனைத்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக ஒரு போட்டியில் வழிநடத்தி விட்டு அடுத்த போட்டியில் ஓய்வெடுக்கும் கேப்டன் தலைமையில் அணி சரியாக செட்டாகாது. இது மிகவும் முக்கியமாகும். இது எந்த வீரருக்கும் நடைபெறும். மேலும் குடும்ப ரீதியான நிகழ்வால் அவர் அங்கே இருக்க வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் உலகக்கோப்பை விரைவில் வரும் நிலையில் நீங்கள் இது போன்ற குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது”

- Advertisement -

“ஒருவேளை மிகவும் அவசரமான தேவை என்றால் நீங்கள் இது போன்ற விடுப்பு எடுக்கலாமே தவிர மற்றவைக்கு எடுக்க கூடாது. அவசரத்துக்கு விடுப்பு எடுப்பது வேறு கதை. ஏனெனில் ஒரு கேப்டன் தொடர்ந்து அணியை வழி நடத்த வேண்டும். குறிப்பாக அனைத்து அணி வீரர்களும் உங்களுடன் இணைந்து நடக்கிறார்கள் என்ற உணர்வை நீங்கள் பெற வேண்டும். இல்லையென்றால் 2 தலைவர்கள் அணியில் இருப்பது போன்ற நிலைமை ஏற்பட்டு விடும். அதனால் அணியும் 2 கோணத்தில் பார்க்கும் நிலை ஏற்படும்” என்று கூறினார்.

Gavaskar

அவர் கூறுவது போல உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்வதற்கு முதலில் ஒரு வருடம் முன்பாகவே ஒரே கேப்டன் தலைமையில் அனைத்து வீரர்களும் இணைந்து விளையாடினால் தான் அனைவரும் ஒன்றாக இணைந்து செட்டாகி சாதிக்க முடியும். ஆனால் முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றது முதலில் அவ்வப்போது காயம், பணிசுமையால் ரோஹித் சர்மா ஓய்வெடுத்ததால் வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த வருடம் 7 வெவ்வேறு வீரர்களை கேப்டனாக பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு சென்றது.

இதையும் படிங்க:IND vs AUS : 3 கோல்டன் டக் அவுட் ஆனதன் மூலம் 6 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் -படைத்த மோசமான சாதனை

எனவே 2015 உலகக் கோப்பையில் தனது குழந்தை பிறந்தும் குடும்பத்தை விட நாடு தான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்து ஆஸ்திரேலியாவில் விளையாடிய முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி போல் இந்திய அணியை ரோகித் சர்மா பொறுப்புடன் வழிநடத்த வேண்டுமென்று சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement