IND vs AUS : 3 கோல்டன் டக் அவுட் ஆனதன் மூலம் 6 ஆவது இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் -படைத்த மோசமான சாதனை

SKY
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது முதலில் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு ஒருநாள் தொடரில் பழி தீர்த்துக்கொண்டது.

Zampa

- Advertisement -

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் மிடில் ஆர்டர் வீரராக இடம் பிடித்திருந்த இந்திய அணியின் முன்னணி இளம் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறினார்.

அவருக்கு பதிலாக இந்த தொடரில் சூரியகுமார் யாதவிற்கு மிடில் ஆர்டரில் நான்காவது இடத்தில் இறங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. டி20 கிரிக்கெட்டில் உலகின் நம்பர் 1 வீரராக இருக்கும் சூரியகுமார் யாதவ் களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் அடித்து நொறுக்குவதால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

SKY 1

ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தான் சந்தித்த முதல் பந்தில் மிட்சல் ஸ்டார்க்கிடம் அவர் கோல்டன் டக் அவுட்டானது அனைவரது மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்கு மூன்றாவதாக கிடைத்த இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் ஆஷ்டன் ஏகர் பந்தை சந்தித்த சூரியகுமார் யாதவ் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறி இருந்தார். இப்படி அடுத்தடுத்து மூன்று போட்டிகளிலும் ஒரே பந்தில் ஆட்டம் இழந்த சூரியகுமார் யாதவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே வேளையில் இந்திய அணி சார்பாக அவர் ஒரு மோசமான சாதனையிலும் ஆறாவது வீரராக இணைந்துள்ளார்.

இதையும் படிங்க : IND vs AUS : அப்றம் என்னப்பா ஐபிஎல் வந்துருச்சு, எல்லாரும் மறக்காம அதுல விளையாடுங்க – இந்திய அணியை விளாசும் முன்னாள் வீரர்

அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக டக் அவுட்டான இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், அணில் கும்ப்ளே, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இருந்த பட்டியலில் தற்போது சூரியகுமார் யாதவும் 6-ஆவது வீரராக இணைந்து மோசமான சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement